Home
Mobile

வேறலெவல் அம்சங்களுடன் களமிறங்கும் Vivo எக்ஸ்90 ப்ரோ: எப்போது அறிமுகம்?

விவோ நிறுவனத்தின் புதிய விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் பற்றிய சில முக்கிய விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதாவது இந்த போனின் அறிமுகம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. அதைப் பற்றி இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்90 ப்ரோ

விவோ எக்ஸ்90 ப்ரோ

அதாவது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் இந்த விவோ எக்ஸ்90 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தகவலை இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 விவோ எக்ஸ்90 ப்ரோ அம்சங்கள்

விவோ எக்ஸ்90 ப்ரோ அம்சங்கள்

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியுடன் இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனைபயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 விவோ எக்ஸ் 90 ப்ரோ பேட்டரி

விவோ எக்ஸ் 90 ப்ரோ பேட்டரி

குறிப்பாக இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ போன் ஃபுல் எச்டி டிஸ்பிளேவுடன் வெளிவரும். பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 100 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் களமிறங்கும் இந்த விவோ எக்ஸ் 90 ப்ரோ மாடல். அதேபோல் இந்த போனில் 1-இன்ச் கேமரா சென்சார் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதன் உதவியுடன் தெளிவான படங்களை எடுக்க முடியும்.

குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது விவோ எக்ஸ் 90 ப்ரோ மாடல். மேலும் இப்போதே ஒரு நல்ல விவோ போனை வாங்க நினைக்கும் பயனர்கள் இந்த விவோ வி25 5ஜி பார்ப்பது நல்லது. அதாவது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய விவரங்களை இப்போது பார்ப்போம்.

 விவோ வி25 5ஜி

விவோ வி25 5ஜி

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் 1,080x2,404 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 Dimensity 900 சிப்செட்

Dimensity 900 சிப்செட்

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை கேமிங் பயனர்கள் நம்பி வாங்கலாம். அதேபோல் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

 64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

விவோ வி25 5ஜி போன் ஆனது 64எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கேம் பூஸ்ட் மோட், லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் 4டி கேம் வைப்ரேஷனுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. 44W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ போன்.

விவோ வி25 5ஜி  விலை

விவோ வி25 5ஜி விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.31,999-ஆக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vivo X90 Pro launch timeline and specifications revealed: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X