Home
Mobile

அறிமுகம் : டூயல் முன்பக்க கேமராவுடன் எக்ஸ்9 (ப்ளூ வேரியண்ட்).!

நினைவூட்டும் வண்ணம் விவோ எக்ஸ்9 பிளஸ் உடன், கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் விவோ எக்ஸ்9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

By Muthuraj

சீனாவில் எக்ஸ்9 ஸ்மார்ட்போனின் ப்ளூ வண்ண மாறுபாட்டை விவோ அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பு இந்த எக்ஸ்9 ஸ்மார்ட்போன் தங்கம், ரோஜா தங்கம், ஸ்டார் சாம்பல் மற்றும் மேட் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைத்தது. சீனாவில் அறிமுகமாகியுள்ள இந்த ப்ளூ மாறுபாடு ஸ்மார்ட்போன் ஆனது 2598 யுவான் (சுமார் ரூ.24,585) என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம் : டூயல் முன்பக்க கேமராவுடன் எக்ஸ்9 (ப்ளூ வேரியண்ட்).!

நினைவூட்டும் வண்ணம் விவோ எக்ஸ்9 பிளஸ் உடன், கடந்த ஆண்டு நவம்பரில் சீனாவில் விவோ எக்ஸ்9 ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக 20 மெகாபிக்சல் தீர்மானம் கொண்ட இரட்டை டூயல் முன்பக்க கேமரா அமைப்பு திகழ்கிறது. இது சோனி ஐஎம்எக்ஸ்376 சென்சார் மற்றும் எப் / 2.0 துளையுடன் வருகிறது. இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல் தீர்மானம் கொண்டது. மேலும் எப் / 2.0, பிடிஏஎப் மற்றும் எல்இடி ஃப்ளாஷ் கொண்ட 16 மெகாபிக்சல் ரியர் கேமராவும் கொண்டிருக்கிறது.

விவோ எக்ஸ்9 ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு கொண்ட மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல முழு எச்டி சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே கொண்டுள்ளது.

இது 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்ட்ராகன் 625 செயலி கொண்டிருக்கிறது, அட்ரேனோ 506 ஜிபியூ உடன் இணைந்த 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ கொண்டு இயங்குகிறது. இது பன்டச் (Funtouch) ஓஎஸ் 3.0 இயங்குதளத்தின் கீழ் மூடப்பட்டுள்ளது.

அறிமுகம் : டூயல் முன்பக்க கேமராவுடன் எக்ஸ்9 (ப்ளூ வேரியண்ட்).!

அதன் ஹோம் பொத்தானில் பதிக்கப்பட்ட ஒரு கைரேகை ஸ்கேனர் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3050எம்ஏஎச் பேட்டரித்திறனும், பாஸ்ட் சார்ஜ் வசதியும் கொண்டிருக்கும். மேலும் இந்த எக்ஸ்9, டூயல் சிம், 4ஜி, வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2 மற்றும் ஜிபிஎஸ் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் வழங்கவுகிறது. அளவீட்டில் 152.6x74x6.99 மிமீ மற்றும் 154 கிராம் எடையுள்ளதாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X9 Blue colour variant launched, comes with dual front cameras. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X