Just In
- 52 min ago
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்.! முழு விவரம்.!
- 1 hr ago
விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.. இன்று மட்டும் கிடைக்கும் சலுகை..
- 2 hrs ago
ISRO: 10 வயதுக்கு மேற்பட்டவர் சான்றிதழுடன் இலவச விண்வெளி பாடம் படிக்க வாய்ப்பு.. எப்படி விண்ணப்பிப்பது?
- 4 hrs ago
இருக்க விவகாரம் போதாதா?- டுவிட்டருக்கு ரூ,1,100 கோடி அபராதம்: உடனே மஸ்க் சொன்ன பதில்!
Don't Miss
- Finance
ஆன்லைன் ஷாப்பிங் பிரியரா நீங்க.. மிந்த்ராவின் சூப்பர் அறிவிப்ப பாருங்க?
- Lifestyle
உயர் இரத்த அழுத்தத்தின் இந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்காதீங்க... உயிருக்கே ஆபத்தாகிரும்...!
- Movies
கேரளா மாநில பிலிம் விருதுகள் - வெல்லப்போகும் நடிகர் நடிகைகள் யார்?
- News
யாரு திட்டத்துக்கு யாரு அடிக்கல் நாட்டுவது? பிரதமர் மோடிக்கு எதிராக வரிந்துக் கட்டும் காங்கிரஸ்!
- Sports
இலங்கை வீரர் கையில் ஆர்சிபி விதி.. ஐபிஎல்-ல் யாரும் கவனிக்காத சுவாரஸ்யம்.. தப்பிக்குமா ராஜஸ்தான் அணி
- Automobiles
இந்தியாவில் வெறும் 2% தான் தேசிய நெடுஞ்சாலை, ஆனால் டோல்கேட் வசூலில் இது தான் நம்பர் 1
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
50எம்பி கேமரா, தரமான சிப்செட் வசதியுடன் விரைவில் வெளிவரும் விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ்..!
விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மாரட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்புடன் தரமான அம்சங்களுடன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும். இப்போது ஆன்லைனில் கசிந்த விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ்
விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.78-இன்ச் எல்டிபிஒ (2.0) E5 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும். எனவே பயன்படுத்துவதற்கு
மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 48எம்பி சென்சார் என மொத்தம் நான்கு கேமரா இடம்பெறும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகஇந்த ஸ்மார்ட்போனி கேமிங் உள்ளிட்ட பல வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 66வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த சாதனம் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்80 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 4500 அல்லது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாகஇந்த சாதனத்தில் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் வெளிவரும்
என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தவிவோ Y21e ஸ்மார்ட்போனின் அம்சங்களை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி Halo Full View டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன்
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

இந்த விவோ Y21e ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் Funtouch OS 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்தஅசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விவோ Y21e ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்தஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல். அதேபோல் எல்இடி பிளாஷ், போர்ட்ரெய்ட் மோட், சூப்பர் HDR மற்றும் ஃபேஸ் பியூட்டி மோட் போன்ற பல கேமரா
அம்சங்களைவழங்குகிறது இந்த சாதனம். விவோ Y21e ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

விவோ Y21e ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் வி5 போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்உள்ளன. விவோY21e ஸ்மார்ட்போன் ஆனது டயமண்ட் க்ளோ மற்றும் மிட்நைட் ப்ளூ நிறங்களில் கிடைக்கும். அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபிமெமரி கொண்ட விவோ Y21e ஸ்மார்ட்போன் மாடலை ரூ.12,990-விலையில் வாங்க முடியும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999