மேம்பட்ட அம்சத்துடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான Vivo X80 Lite: விலை இதோ!

|

விவோ நிறுவனம் Vivo X80 Lite ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 900 எஸ்ஓசி சிப்செட், டிரபிள் ரியர் கேமரா என பல்வேறு ஆதரவுகளுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

விவோ எக்ஸ்80 லைட்

விவோ எக்ஸ்80 லைட்

விவோ எக்ஸ்80 சீரிஸை கடந்த சில தினங்களுக்கு முன்பு விவோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

இந்த தொடரில் விவோ எக்ஸ் 80 மற்றும் விவோ எக்ஸ் 80 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றது.

இந்த நிலையில் தற்போது இந்த தொடரின் நுழைவு நிலை ஸ்மார்ட்போனாக விவோ எக்ஸ்80 லைட் அறிமுகம் செய்யதுள்ளது.

Vivo X80 லைட் சிறப்பம்சங்கள்

Vivo X80 லைட் சிறப்பம்சங்கள்

Vivo X80 லைட் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் 6.44 இன்ச் முழு அமோலெட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது.

இந்த டிஸ்ப்ளே HD+ ஆதரவுடன் 1,080×2,400 பிக்சல்கள் தீர்மானம், 90Hz ரெஃப்ரஷிங் ரேட், 1300 நிட்ஸ் உச்ச பிரகாசம் மற்றும் 180Hz டச் மாதிரி விகிதத்தைக் கொண்டிருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC ஆதரவைக் கொண்டிருக்கிறது.

64 எம்பி முதன்மை கேமரா

64 எம்பி முதன்மை கேமரா

ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி முதன்மை கேமரா இருக்கிறது. 8 எம் அல்ட்ரா வைட் கேமரா மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமரா ஆதரவு இதில் இருக்கிறது.

ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 50 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 OS ஆதரவு

ஆண்ட்ராய்டு 12 OS ஆதரவு

இந்த விவோ ஸ்மார்ட்போனானது 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4400 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் FuntouchOS 12 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 12 மூலம் இயங்குகிறது.

Vivo V22 ஸ்மார்ட்போன்

Vivo V22 ஸ்மார்ட்போன்

Vivo நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் Vivo V22 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது.பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக விவோ ஒய்22 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y22 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,999-ஆக உள்ளது. ஆனால் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-விலையில் வாங்க முடியும்.

6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.55-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

விவோ Y22 ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.

720 x 1612 பிக்சல்ஸ், 20:1:19 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 530 நிட்ஸ் ப்ரைட்னஸ் உள்ளிட்ட சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.

50எம்பி பிரைமரி கேமரா

50எம்பி பிரைமரி கேமரா

விவோ Y22 ஸ்மார்ட்போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ Y22 ஸ்மார்ட்போன் மாடல்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

விவோ Y22 ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் வசதி உள்ளது. எனவே ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

மேலும் Funtouch OS 12 சார்ந்தஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன் மாடல்.

விவோ Y22 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும்.

மேலும் 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo X80 Lite Smartphone Launched with 64MP Primary Camera, Dimensity 900 SoC and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X