இன்னும் ஐந்தே நாள்தான்- தரமான அம்சம், கிளாஸான லுக் உடன் விவோ எக்ஸ்70 ப்ரோ+: லீக்கான தகவல்கள்!

|

விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் சிறப்பம்சங்கள் டீனா பட்டியல் வழியாக ஆன்லைன் கசிந்துள்ளன. விவோ எக்ஸ் 70 தொடர் ஸ்மார்ட்போன்களை செப்டம்பர் 9 ஆம் சீனாவில் அறிவிக்க இருக்கிறது நிறுவனம். இந்த ஸ்மார்ட்போன் மூன்று வகைகளில் வரும் எனவும் 50 மெகாபிக்சல் கேமராவுடன் இது வரும் எனவும் கூறப்படுகிறது.

விவோ எக்ஸ் 70 தொடர் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 70 தொடர் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 70 தொடர் ஸ்மார்ட்போன்கள் செப்டம்பர் 9 ஆம் தேதி சீனாவில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் விவோ எக்ஸ் 70, விவோ எக்ஸ் 70 ப்ரோ, விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் போன்ற மூன்று சாதனங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் வெளியாகியுள்ளது.

விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் சிறப்பம்சங்கள்

விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் சிறப்பம்சங்கள்

விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போனின சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது மாதிரி எண் வி2145ஏ உடன் டீனா தளத்தில் தோன்றியது. வெளியான பட்டியலின்படி ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.

6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே

ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 1440 x 3200 பிக்சல்கள் தீர்மானத்தோடு குவாட் எச்டி ப்ளஸ் தீர்மானத்தோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு என இதில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 3 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் செயலி உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் சிப் செட் மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ரேம் என்ற வேரியண்ட்கள் வரும் என கூறப்படுகிறது.

குவாட் கேமரா அமைப்பு

குவாட் கேமரா அமைப்பு

விவோ எக்ஸ் 70 ப்ரோ + ஸ்மார்ட்போனானது குவாட் கேமரா அமைப்புடன் வரும் எனவும் இது ஓஐஎஸ் ஆதரவுடன் கூடிய 50 மெகாபிக்சல் சாம்சங் ஜிஎன்1 முதன்மை கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதோடு 48 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 598 சூப்பர்வைட் லென்ஸ், 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா 2 எக்ஸ் ஆப்டிக் ஜூம் மற்றும் ஓஐஎஸ் ஆதரவு, 8 மெகாபிக்சல் ஓவி 08 ஏ10 பெரிஸ்கோப் ஜூம் லென்ஸ் ஆகிய ஆதரவுகளோடு வரும் என கூறப்படுகிறது.

32 மெகாபிக்சல் முன்புற கேமரா

32 மெகாபிக்சல் முன்புற கேமரா

அதேபோல் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கென 32 மெகாபிக்சல் முன்புற கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 4430 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வரும் எனவும் இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் அம்சம் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ப்ளூ கலர் வேரியண்ட்

ப்ளூ கலர் வேரியண்ட்

வெய்போவின் சீன டிப்ஸ்ட்ர் சமீபத்தில் விவோ எக்ஸ் 70 ப்ரோ + ப்ளூ கலர் வேரியண்ட் வரும் என குறிப்பிட்டுள்ளது. முந்தைய கசிவுகளின் படி, ஸ்மார்ட்போன் ஆரஞ்ச் மற்றும் பிளாக் வண்ண விருப்பங்களில் வரும் எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து மொத்தம் இந்த போன் மூன்று வண்ண விருப்பத்தில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்புற மையத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி

மேற்புற மையத்தில் பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதி

முன்னதாக விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் தகவல்கள் ரெண்டர்கள் ஆன்லைனில் கசிந்தன. இந்த ஸ்மார்ட்போன் வளைந்த காட்சி மற்றும் மேற்புற மையத்தில் பஞ்ச் ஹோல் கட் அவுட் வசதி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வரும் என கூறப்படுகிறது.

நான்கு கேமரா அமைப்பு

நான்கு கேமரா அமைப்பு

விவோ எக்ஸ் 70 ப்ரோ ப்ளஸ் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இது செங்குத்தாக ஒவ்வொன்றுக்கு மேல் ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் நான்காவது சென்சார் கேமரா ஆனது மூன்றாவது கேமராவின் வலது புறத்தில் வைக்கப்பட்டுள்ளன. இதன் வலது புறத்தில் கட்டுப்பாடு மற்றும் ஆற்றல் ரக பட்டன்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இது யூஎஸ்பி டைப் சி போர்ட், ஸ்பீக்கர் கிரில், சிம் ட்ரே உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளோடு வருகிறது.

File Images

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo X70 pro+ Specs Leaked Before its Launch on September 9

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X