ஒரு நாள் வெயிட் பண்ணுங்க- நாளை விற்பனைக்கு வரும் விவோ எக்ஸ்70 ப்ரோ+: போட்டோ அப்படி இருக்கும்., உயர்ரக அம்சம்!

|

விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த சாதனத்தின் விலை ஆனது ரூ.79,990 ஆக இருக்கிறது. இந்த சாதனம் ஒற்றை எனிக்மா பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனத்தை பிளிப்கார்ட் மற்றும் விவோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலமாக அக்டோபர் 12 முதல் வாங்கலாம். விவோ எக்ஸ் 70 ப்ரோ+ சாதனத்துக்கு அறிமுக சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதற்கு ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி டெபிட் கார்டுகளுக்கு ரூ.4000 தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

விவோ எக்ஸ்70 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ்70 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ்70 ப்ரோ ப்ளஸ் சக்திவாய்ந்த சிப் செட் வசதியோடு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. இது இ5 அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் அனைத்து ப்ரீமியம் ரேஞ்ச் அம்சங்களையும் கொண்டிருக்கிறது. விவோ எக்ஸ் 70 ப்ரோ+ முக்கிய அம்சங்களில் ஒன்று அதன் கேமரா ஆகும். இது தொழில்முறை புகைப்படத்தாரர்களுக்கு மிகவும் பேருதவியாக இருக்கும். இருப்பினும் இதில் உள்ள சிக்கல் இதன் விலை ஆகும். இதே விலையில் ஐபோன் 12 தொடர் உள்ளிட்ட லேட்டஸ்ட் ஐபோன் சாதனங்களையே வாங்கலாம்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் வசதி

விவோ X70 ப்ரோ+ குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ உடன் வருகிறது. விவோ எக்ஸ் 70 ப்ரோ+ IP68 சான்றளிக்கப்பட்ட போன் மற்றும் 50W பாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 55W வயர்டு சார்ஜிங்கையும் அனுமதிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.78' இன்ச் டபிள்யூ கியூஹெச்டி பிளஸ் உடன் 1,440 x 3,200 பிக்சல்கள் கொண்ட இ 5 அமோலேட் டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டுள்ளது. இந்த போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் வரை இயக்கப்படுகிறது. இது இரட்டை சிம் (நானோ) உடன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 12 இல் இயங்குகிறது. இது ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது.

ஃபன் டச் ஓஎஸ் 12 உடன் ஆதரவு

ஃபன் டச் ஓஎஸ் 12 உடன் ஆதரவு

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன் டச் ஓஎஸ் 12 உடன் வருகிறது. இந்த சாதனம் 5 அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது. இது 120 ஹெர்ட்ஸ் வரை புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த சாதனமானது சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 888+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரதான கிம்பல் கேமரா உடன் வருகிறது.

48 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா

48 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் கேமரா

இரண்டாம் நிலை கேமராவாக 48 எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் உடனும் 12 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் சென்சார் உடனும் வருகிறது. அதோடு இதில் 8 மெகாபிக்சல் பெரிஸ்கோப் லென்ஸ் உடன் ஓஐஎஸ் ஆதரவையும் கொண்டிருக்கிறது.

முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா

முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் அறிமுகத்தின் போது விலை ரூ.99,999 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தில் 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 55 வாட்ஸ் வயர் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்

பாதுகாப்பு அம்சத்துக்கு இந்த சாதனத்தில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் இருக்கிறது. மேலும் இது ஐபி68 மதிப்பீட்டை கொண்டிருக்கிறது. 2.4 ஜிகாஹெட்ஸ் மற்றும் 5.1 ஜிகாஹெர்ட்ஸ் பேண்ட்ஸ் உடன் டூயல் பேண்ட் வைஃபை வசதியை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Vivo X70 Pro+ Smartphones Sale Going to Start on Tomorrow in India: Price, Offers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X