அம்சங்கள் எல்லாம் லீக்: ஜூன் அறிமுகமாகும் விவோ எக்ஸ் 70 ப்ரோ+

|

விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூன் மாதம் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

விவோ எக்ஸ் 70 ப்ரோ+

விவோ எக்ஸ் 70 ப்ரோ+

விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பிற அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ எக்ஸ் 70 சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 70 சீரிஸ் ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளது. விவோ எக்ஸ் 60 சீரிஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்த சில வாரங்களிலேயே விவோ எக்ஸ் 60 மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ டிசம்பரில் சீனாவில் அறிமுகமானது. அடுத்து சிறிது காலத்தில் விவோ எக்ஸ் 60 ப்ரோ+ வெளியிடப்பட்டது. இந்நிலையில் சீன டிப்ஸ்டர் பகிர்ந்த விவரக்குறிப்புகள்படி, விவோ எக்ஸ் 70 ப்ரோ+ டாப் எண்ட் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தது. ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி, சக்திவாய்ந்த கேமரா, பெரிய பேட்டரி மற்றும் வேகமான சார்ஜிங் ஆதரவோடு இது வருகிறது. விவோ எக்ஸ் 70 தொடர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி

4500 எம்ஏஎச் பேட்டரி

இதில் விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. விவோ எக்ஸ் 60 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது 4200 எம்ஏஎச் பேட்டரியை விட பெரியதாக இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. அதேபோல் விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது 1/1.28 இன்ச் சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி

விவோ எக்ஸ் 70 ப்ரோ+ ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என டிப்ஸ்டர் தெரிவிக்கிறது. விவோ எக்ஸ் 70 சீரிஸ் ஜூன் மாதத்தில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் உலகளாவிய சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்வதற்கு முன்பு சீனாவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

விவோ எக்ஸ்60 அம்சங்கள்

விவோ எக்ஸ்60 அம்சங்கள்

  • டிஸ்பிளே: 6.56-இன்ச் இ3 AMOLED டிஸ்பிளே (2376 x 1080 பிக்சல்)
  • 19:8:9 என்ற திரைவிகிதம்
  • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
  • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
  • ரேம்: 8ஜிபி/12ஜிபி
  • மெமரி: 128ஜிபி/256ஜிபி
  • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி tertiary சென்சார்
  • செல்பீ கேமரா: 32எம்பி செல்பீ கேமரா
  • பேட்டரி: 4300 எம்ஏஎச் பேட்டரி
  • 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • இயங்குதளம்: OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11
  • 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை,
  • புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,
  • என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • விவோ எக்ஸ்60 ப்ரோ அம்சங்கள்

    விவோ எக்ஸ்60 ப்ரோ அம்சங்கள்

    • டிஸ்பிளே: 6.56-இன்ச் இ3 AMOLED டிஸ்பிளே (2376 x 1080 பிக்சல்)
    • 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
    • எச்டிஆர்10 பிளஸ் ஆதரவு
    • 1300 nits பிரைட்நஸ் வசதி
    • இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் ஆதரவு
    • சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்
    • ரேம்:12ஜிபி
    • மெமரி:256ஜிபி
    • ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 13எம்பி tertiary சென்சார் செல்பீ கேமரா: 32எம்பி
    • செல்பீ கேமரா பேட்டரி: 4200எம்ஏஎச்
    • பேட்டரி 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
    • இயங்குதளம்: OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை,
    • புளூடூத் 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ்,
    • என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்

Best Mobiles in India

English summary
Vivo X70 pro+ smarphone May Launching on June with this Specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X