Home
Mobile

இதோ இந்தமாத கடைச்சிக்குள்: வேற லெவல் அம்சங்களோடு வரும் விவோ எக்ஸ் 60 சீரிஸ்!

விவோ எஸ்க் 60, விவோ எக்ஸ் 60 ப்ரோ, விவோ எக்ஸ் 60 ப்ரோ+ இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ் 60, எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 60, எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்

விவோ 2020 டிசம்பரில் சீனாவில் எக்ஸ் 60, எக்ஸ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிவித்தது. இதையடுத்து எக்ஸ் 20 ப்ரோ+ ஸ்மார்ட்போன் ஜனவரி 2021 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாத இறுதிக்குள் விவோ எக்ஸ் 60 தொடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விவோ எக்ஸ் 60 அறிமுகம்

விவோ எக்ஸ் 60 அறிமுகம்

விவோ எக்ஸ் 60 அறிமுகம் செய்வது விவோவின் நிபூன் மரியா சந்தைப்படுத்தல் தலைவர் உறுதிப்படுத்தியதாக தெரிவித்தார். விவோ எக்ஸ் 60 தொடரில் மூன்று சாதனங்கள் இடம்பெறும் எனவும் இம்மாத இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ் 60 சீரிஸ் விலை விவரங்கள்

விவோ எக்ஸ் 60 சீரிஸ் விலை விவரங்கள்

விவோ எக்ஸ் 60 சீரிஸ் ஆரம்ப விலை ரூ.40,000 ஆக இருக்கும் எனவும் விவோ எக்ஸ் 60 8ஜிபி மற்றும் 128 ஜிபி விலை இந்திய மதிப்புப்படி ரூ.39,290 ஆக இருக்கும் எனவும் 8ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பு மாடல் இந்திய மதிப்புப்படி ரூ.42,660 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விவோ எக்ஸ் 60 ப்ரோ 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி என்ற ஒரே வேரியண்டில் இந்திய மதிப்புப்படி ரூ.50,510 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவோ எக்ஸ் 60 ப்ரோ+ 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.56,444 ஆக இருக்கும் எனவும் 12 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை ரூ.67,740 ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விவோ எக்ஸ் 60 ப்ரோ+ சிறப்பம்சங்கள்

விவோ எக்ஸ் 60 ப்ரோ+ சிறப்பம்சங்கள்

விவோ எக்ஸ் 60 ப்ரோ+ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது 6.56 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே, எச்டிஆர் 10+ ஆதரவுடன் வரும் எனெவும் தெரிவிக்கப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 888 5என்எம் செயலி மூலம் இயக்கப்படும். ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 4200 எம்ஏஎச் பேட்டரி 55 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் ஆதரவு இருக்கும் என கூறப்படுகிறது.

நான்கு பின்புற கேமராக்கள்

நான்கு பின்புற கேமராக்கள்

இதில் ஆப்டிக்கல் லென்ஸ் கொண்ட நான்கு பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இதில் 48 எம்பி முதன்மை கேமரா, 50 எம்பி சாம்சங் ஜிஎன்1, 32 எம்பி கேமரா, 8 எம்பி கேமரா என நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா இதில் பொருத்தப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, 12ஜிபி ரேம் உடன் பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 48 எம்பி முதன்மை கேமரா, 13 எம்பி இரட்டை கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு முன்பக்கத்தில் 32 எம்பி செல்பி கேமரா சேவையும் இதில் இருக்கிறது. ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் அம்சம் உள்ளது.

4200 எம்ஏச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

4200 எம்ஏச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்

விவோ எக்ஸ் 60 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.56 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, எச்டிஆர் 10 ப்ளஸ் ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவை உள்ளது. இதில் 4200 எம்ஏச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி முதன்மை கேமரா, இரட்டை 13 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி கேமரா ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் 32 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X60 Series Will be Launching Soon in India: Specs, Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X