Home
Mobile

மார்ச் 25: அசத்தலான அம்சங்களுடன் விவோ எக்ஸ்60 சீரிஸ்.!

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்60, விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ், விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மாரட்போன்களை வரும் மார்ச் 25-ம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும்.

எக்ஸிநோஸ் 1080 எஸ்ஒசி

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் வரும் மார்ச் 25-ம் தேதி
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக விவோ எக்ஸ்60 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன்கள் எக்ஸிநோஸ் 1080 எஸ்ஒசி ஆதரவுடன் வெளிவரும்.

 விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ்

ஆனால் விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட் வசதியுடன் வெளிவரும். மேலும் இந்த சாதனங்கள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் சாதனத்தின் முழு விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் டிஸ்பிளே

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் டிஸ்பிளே

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2376 x 1080 பிக்சல் தீர்மானம், எச்டிஆர்10+ ஆதரவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிங் மற்றும் 1300 நைட்ஸ் ப்ரைட்னஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் பிராசஸர்

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் பிராசஸர்

இந்த புதிய விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 888 5என்எம் பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் OriginOS 1.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் கேமரா

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் கேமரா

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் லென்ஸ்கள் கொண்ட குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் சோனி ஐஎம்எக்ஸ் 598 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா (114 ° அல்ட்ராவைடு ஆங்கிள் மற்றும் 4-ஆக்சிஸ் ஓஐஎஸ்) + 1 / 1.3" லார்ஜ் சென்சார் சைஸ் மற்றும் எஃப் / 1.57 லென்ஸ் கொண்ட 48 எம்பி சாம்சங் ஜிஎன் 1 கேமரா + 50 மிமீ ஃபோக்கல் லென்ங்த் மற்றும் எஃப் / 2.08 லென்ஸ் கொண்ட 32 எம்பி போர்ட்ரெயிட் கேமரா +எஃப் / 3.4லென்ஸ், ஓஐஎஸ், 5 எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.

மைப்பானது 60 எக்ஸ்

மேலும் இந்த கேமரா அமைப்பானது 60 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 4 கே எச்டிஆர் 10 + மற்றும் 8 கே வீடியோ பதிவு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. அதேபோல் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. குறிப்பான இந்த சாதனத்தின் முன் மற்றும் பின்பக்க கேமரா லென்ஸ் நானோகிரிஸ்டலின் கட்டமைப்பு பூச்சுடன் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் பேட்டரி

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் பேட்டரி

விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, இரட்டை 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏஎக்ஸ்,புளூடூத் 5.1, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

விவோ எக்ஸ்60

விவோ எக்ஸ்60

அதேபோல் விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போனின் பின்புறம் மாடல் 48எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி செகன்டரி சென்சார் + 13 portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த விவோ எக்ஸ்60 ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

விவோ எக்ஸ்60 ப்ரோ

விவோ எக்ஸ்60 ப்ரோ

பின்பு விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 13எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 13எம்பி portrait shooter + 8எம்பி periscope shooter என மொத்தம் நான்கு கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்60 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்.

Best Mobiles in India

English summary
Vivo X60 Pro Plus with 48 Mega Pixel Camera Launching in India on March 25: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X