இது வேற மாதிரி இருக்கும்: வளைந்த டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்போடு விவோ எக்ஸ் 60!

|

விவோ எக்ஸ் 60 சாதனம் வளைந்த டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, எக்ஸினோஸ் 1080 சிப்செட் உடன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் இ3 அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போன்

விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் வளைந்த டிஸ்ப்ளே, 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. விவோ நிறுவனம் இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் விவோ எக்ஸ் 60 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ் 60 ப்ரோ ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுடன் விவோ எக்ஸ் 60 ஐ சாதனத்தை அறிமுகப்படுத்தியது. தற்போது விவோ எக்ஸ் 60 சாதனம் வளைந்த டிஸ்ப்ளேவுடன் சீனாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் மாடல் பிளாட் சாதனமாக இருக்கும் நிலையில் இது வளைந்த மாறுபாடாக இருக்கிறது.

வளைந்த டிஸ்ப்ளே பதிப்பு

வளைந்த டிஸ்ப்ளே பதிப்பு

விவோ எக்ஸ் 60 ஸ்மார்ட்போனானது வளைந்த டிஸ்ப்ளே பதிப்பு மிட்நைட் பிளாக், ஷிம்மர் ப்ளூ மற்றும் ஷிம்மர் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி, 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்களில் வருகிறது.

விவோ எக்ஸ் 60 விலை

விவோ எக்ஸ் 60 விலை

விவோ எக்ஸ் 60 வளைந்த மாறுபாடுடன் வருகிறது. விவோ எக்ஸ் 60 மாறுபாடானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்ட் இந்திய மதிப்பு விலை ரூ.39,630 ஆகவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.43,020 ஆகவும் டாப் எண்ட் வேரியண்ட் ஆன 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.45,290 ஆக இருக்கிறது.

டிஸ்ப்ளே கீழ் கைரேகை ஸ்கேனர்

டிஸ்ப்ளே கீழ் கைரேகை ஸ்கேனர்

விவோ எக்ஸ் 60 சாதனத்தின் வளைந்த டிஸ்ப்ளே வேரியண்ட் குறித்து பார்க்கையில், இது 6.56 இன்ச் இ3 அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 2376 x 1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் எக்ஸினோஸ் 1080 மூலம் இயக்கப்படுகிறது. இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என ஹை எண்ட் வேரியண்ட் உடனும் பாதுகாப்பு அம்சத்திற்கு டிஸ்ப்ளே கீழ் கைரேகை ஸ்கேனர் உடனும் வருகிறது.

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

48 மெகாபிக்சல் முதன்மை கேமரா

விவோ எக்ஸ் 60 வளைந்த டிஸ்ப்ளே பதிப்பு சோனி ஐஎம்எக்ஸ் சென்சார் உடனான 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 13 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் இரண்டாம் நிலை கேமரா, 13 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது. மேலும் முன்பக்கத்தில் செல்பி வசதிக்கென 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

4300 எம்ஏஎ்ச பேட்டரி அம்சம்

4300 எம்ஏஎ்ச பேட்டரி அம்சம்

அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 4300 எம்ஏஎ்ச பேட்டரி அம்சத்தோடு 33 வாட்ஸ் ஃபிளாஷ் சார்ஜ் ஆதரவுடன் வருகிறது. மேலும் ஆண்ட்ராய்டு 11ஐ அடிப்படையிலான விவோ புதிய ஒரிஜினர் 1.0 மூலம் இயக்கப்படுகிறது. 5 ஜி ஆதரவோடு வரும் இந்த ஸ்மார்ட்போன் யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகியவையோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் எடை 176 கிராம் ஆக இருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Vivo X60 Announced With Curve Display, 120 HZ Refreshing Rate Display and More: Price, Specs

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X