48எம்பி கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

|

விவோ நிறுவனத்தின் புதிய விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் 48எம்பி கேமரா, ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

றிக்கையின்படி இங்கிலாந்தில்

மேலும் தி வெர்ஜ் அறிக்கையின்படி இங்கிலாந்தில் அறிமுகமாகியுள்ள விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.71,900 ஆகும்.

றத்தில் வெளியாகியுள்ளது. விவோ

குறிப்பாக இந்த புதிய ஸ்மார்ட்போன் சிங்கிள் ஆல்பா கிரே நிறத்தில் வெளியாகியுள்ளது. விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன் அக்டோபர் 29-ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என்றும், மேலும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போலந்து மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் வாங்க கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

iQOO U1x ட்ரிபிள் கேமராவுடன் அறிமுகம்.. விலை என்ன தெரியுமா?

தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, விவோ

யுகே தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளபடி, விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 765ஜி SoC மூலம் இயக்கப்படுகிறது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

 6.56 இன்ச் அளவிலான புல்

இந்த ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் அளவிலான புல் எச்டி + AMOLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும் 2,376 x 1,080 பிக்சல் தீர்மானம் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

8எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி சென்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 8எம்பி ஜூம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இந்த சாதனத்தின் பிரைமரி கேமராவில் ஒரு கிம்பல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவும் உள்ளது. இது மென்மையான, நிலையான வீடியோக்களை எளிதாகப் பிடிக்க உதவுகிறது.

கொண்டு இந்த சாதனம்

செல்பீ படங்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போனில் 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர், டிஸ்பிளேவின் ஹோல் பஞ்ச் கட்அவுட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4315எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. பின்பு 33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மேலும் இது கைரேகை

வைஃபை 2.4 ஜி, 5ஜி வைஃபை மிமோ, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஓடிஜி, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி 2.0 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ எக்ஸ்51 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இது கைரேகை ஸ்கேனரையும் கொண்டுள்ளது. விவோ எக்ஸ்51 5ஜி ஆனது 158.46 × 72.80 × 8.04 மிமீ அளவிடும் மற்றும் 181.5 கிராம் எடை கொண்டது.

ஆனது கடந்த ஜூலை

விவோ X51 5G ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ எக்ஸ் 50 ப்ரோவின் மறுபெயரிடப்பட்ட பதிப்பாகத் தோன்றுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo X51 5G Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X