48 எம்பி கேமராவோடு விவோ எக்ஸ்50இ அறிமுகம்: இதோ விலை மற்றும் அம்சங்கள்!
விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி ஆதரவு, 8 ஜிபி ரேம், 4350 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பிற அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன்
விவோ புதிய எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. விவோ நிறுவனம் புதிய மாடலான எக்ஸ் 50இ 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. விவோ எக்ஸ் 50இ 48 எம்பி குவாட் கேமரா அமைப்பு, ஸ்னாப்டிராகன் செயலி அமோலெட் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

விவோ எக்ஸ் 50 இ 5 ஜி: அம்சங்கள்
விவோ எக்ஸ் 50 இ குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்புடன் வருகிறது இந்த சாதனம். இந்த ஸ்மார்ட்போன் 4350 எம்ஏஹெச் பேட்டரி அம்சம் இதில் உள்ளது.

6.44 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே
விவோ ஸ்மார்ட்போன் 6.44 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஒரு செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் இடம்பெற்றுள்ளது. இந்த டிஸ்ப்ளே 1080 x 2400 பிக்சல் எஃப்.எச்.டி + ரெசல்யூஷன் கொண்டுள்ளது. அதோடு இதில் பாதுகாப்பு அம்சத்திற்காக கைரேகை ஸ்கேனரையும் வழங்குகிறது.

48 எம்பி முதன்மை சென்சார் கேமரா
விவோ எக்ஸ் 50 இ 48 எம்பி முதன்மை சென்சார் கொண்டுள்ளது. இது வைர வடிவ குவாட் கேமரா அமைப்புடன் வருகிறது. கேமரா அமைப்பில் 13MP டெலிஃபோட்டோ சென்சார், 120 டிகிரி FOV உடன் 8MP அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் மற்றும் மேக்ரோ ஷாட்களுக்கு 2MP சென்சார் ஆகியவை அடங்கும். அதோடு இதில் 32 எம்பி செல்பி கேமராவை வாட்டர் டிராப் வடிவமைப்போடு வருகிறது.

4,350 mAh பேட்டரி
விவோ எக்ஸ் 50 இ 5 ஜி யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4,350 mAh பேட்டரியுடன் வருகிறது. பேட்டரி வேகமான சார்ஜிங்கிற்கு 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இதில் உள்ளது.

விவோ எக்ஸ் 50 இ 5 ஜி: விலை
விவோ எக்ஸ் 50 இ 5 ஜி ஸ்மார்ட்போனின் விலை தைவானில் என்.டி $ 13,990 ஆகும். இதன் இந்திய மதிப்பின்படி ரூ .35,597 ஆகும். இந்த சாதனம் நைட் மற்றும் வாட்டர் மிரர் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த சாதனம் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications