Home
Mobile

அறிமுகமானது புது விவோ 5ஜி போன்.. 7500எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்500 (vivo X500) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. விரைவில் இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். இப்போது விவோ எக்ஸ்500 போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்500 அம்சங்கள் (vivo X500 Specifications): 6.59-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260 x 2,750 பிக்சல்ஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), எச்டிஆர் சப்போர்ட், 300Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate), 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது விவோ 5ஜி போன்.. 7500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

3என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9600எம் சிப்செட் (3nm octa-core MediaTek Dimensity 9600M chipset) உடன் விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் ARM G1-Ultra GPU கிராபிக்ஸ் ஆதரவும் இதில் உள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. Origin OS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் விவோ எக்ஸ்500 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

50எம்பி Sony LYTIA-828 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி LYT610 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. 120fps வேகத்தில் 4K ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது இந்த விவோ போன். மேலும் V3+ இமேஜிங் சிப் ஆதரவும் இந்த போனில் உள்ளது.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த விவோ எக்ஸ்500 போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802 பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், ககலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.

அறிமுகமானது புது விவோ 5ஜி போன்.. 7500எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

7500எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ எக்ஸ்500 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90W ஃபிளாஷ் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் ஆதரவுகளுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 213 கிராம் ஆகும்.

விவோ எக்ஸ்500 விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்500 மாடலின் விலை 5,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.78,665)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்500 மாடலின் விலை 5,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.85,820)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்500 மாடலின் விலை 6,999 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,00,125)-ஆக உள்ளது.
செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் சீனாவில் விவோ எக்ஸ்500 போன் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

English summary
vivo X500 with 7500mAh battery launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X