Vivo வேற மாறி.. 7500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சீன மார்கெட்டில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற விவோ எக்ஸ்500 சீரிஸ் (Vivo X500 Series) இப்போது குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. இதில் விவோ எக்ஸ்500 (Vivo X500) ஸ்மார்ட்போன் இந்திய மார்கெட்டில் வெளியாகும் என்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. இந்த மாடலின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்கலாம்.
இந்திய மார்கெட்டில் வருகிற நவம்பர் மாத இறுதியில் விவோ எக்ஸ்500 சீரிஸ் வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் வெளியாகினாலும், குளோபல் மார்கெட்டில் வெளியாக வெர்ஷன்களில் கிடைத்த பீச்சர்கள் மற்றும் விலையே இந்திய மார்கெட்டுக்கும் நிர்ணயம் செய்யப்படும். இப்போது, குளோபல் மார்கெட்டில் வெளியாகிவிட்டதால், யூகிக்க முடிகிறது.

விவோ எக்ஸ்500 அம்சங்கள் (Vivo X500 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9600எம் 3என்எம் (Octa Core Dimensity 9600M 3nm) சிப்செட் மற்றும் ஆர்ம் மாலி அல்ட்ரா ஜிபியு (ARM G1 Ultra GPU) கிராபிக்ஸ் கார்டை இந்த விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கொடுக்கப்பட்டு இருக்கிறது. லேட்டஸ்ட் மாடல்களில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கிடைக்கிறது. ஓர்ஜின் ஓஎஸ் 7 (Origin OS 7) கிடைக்கிறது.
சோனி லைட்டியா 828 (Sony LYTIA 828) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவுக்கு சோனி எல்ஒய்டி610 (Sony LYT610) சென்சார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் கொண்ட மாடலாக இந்த விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. மேலும், வி3பிளஸ் இமேஜிங் சிப் (V3+ Imaging Chip) கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவுடன் இந்த விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7500mAh பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரிக்கு 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. மற்ற பீச்சர்கள் வழக்கம்போல கிடைக்கின்றன. ஆகவே, இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. கிரே, ஒயிட் மற்றும் பிளாக் கலர்களில் வெளியாகி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,09,425 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.1,23,416ஆகவும் இருக்கிறது. இதே விலைக்கு இந்திய மார்கெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
