Home
Mobile

பிரிச்சி விட்டாப்ல.. SONY கேமரா.. 7500mAh பேட்டரி.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அல்ட்ரா பிரீமியம் கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்களுடன் விவோ எக்ஸ்500 (Vivo X500) களமிறங்கி இருக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், சோனி லைட்டியா சென்சார், வி3பிளஸ் இமேஜிங் சிப் கிடைக்கின்றன. மீடியாடெக் டைமன்சிட்டி 9600எம் சிப்செட்டுடன் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது.

சீன மார்கெட்டில் விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் மட்டுமல்லாமல், விவோ எக்ஸ்500 ப்ரோ மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களும் வெளியாகி இருக்கின்றன. இதில் மிட்-பிரீமியம் பிரியர்களுக்கு ஏற்ற மாடலாக விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் இருப்பதால், ஒட்டுமொத்த கவனமும் இந்த மாடல் மீது இருக்கிறது.

பிரிச்சி விட்டாப்ல.. SONY கேமரா.. 7500mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

விவோ எக்ஸ்500 அம்சங்கள் (Vivo X500 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9600எம் 3என்எம் (Octa Core MediaTek Dimensity 9600M 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆர்ம் மாலி ஜி1 அல்ட்ரா ஜிபியு (ARM G1 Ultra GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) கிடைக்கிறது. ஓர்ஜின்ஓஸ் 7 (Origin OS 7) கொடுக்கப்பட்டு உள்ளது.

6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் 4000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கிடைக்கிறது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவி்ல் சோனி லைட்டியா 828 (Sony LYTIA 828) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் சோனி லைட்டியா610 (Sony LYT610) சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.

மேலும், 3.1எக்ஸ் ஆப்டிகல் ஜூமிங் கிடைக்கிறது. இதுவொரு ஜீஸ் ஆப்டிக்ஸ் (ZEISS Optics) சப்போர்ட் கொண்ட மாடலாகும். ஆகவே, லேட்டஸ்ட் வி3பிளஸ் இமேஜிங் சிப் (V3+ Imaging Chip) கொடுக்கப்பட்டு இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா கொண்ட மாடலாக இந்த விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் இருக்கிறது.

இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Ultrasonic Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7500mAh பேட்டரியுடன் இந்த விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது.

40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்து இருக்கிறது. இந்த பேட்டரியுடன் 8.15 எம்எம் தடிமன் மற்றும் 213 கிராம் எடை கொடுத்துள்ளது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.78,693 ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.85,848 ஆகவும் இருக்கிறது.

மேலும், 12 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டின் விலை ரூ. 1,00,158 ஆக இருக்கிறது. சீன மார்கெட்டில் வருகிற செப்டம்பர் 24ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. ஓரிரு வாரங்களில் குளோபல் மார்கெட் வெளியீடு குறித்த விவரங்களை எதிர்பார்க்கலாம். பிறகு இந்தியாவில் கிடைக்க வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X500 With 50MP Camera 7500mAh Battery 90W Charging Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X