Home
Mobile

என்ன Xiaomi சித்தப்பு சௌக்கியமா.. வெளுத்து விட்ட VIVO.. 8000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

ஷாவ்மீ நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஷாவ்மீ 18 மாடல் ஆனது காம்பாக்ட் டிசைனை கொண்டிருந்தாலும், அதாவது கையடக்கமான வடிவமைப்பை கொண்டிருந்தாலும் கூட, 7200mAh அளவிலான பெரிய பேட்டரியை பேக் செய்யும் என்கிற தகவல் வெளியான வேகத்தில்.. விவோ (Vivo) நிறுவனமும் இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மிகவும் நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான ஸ்மார்ட் பிக்காச்சு (Smart Pikachu) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்பட. விவோ எக்ஸ்500 (VIVO X500) ஸ்மார்ட்போன் ஆனதும் ஷாவ்மீ 18 மாடலை போலவே 8000mAh அல்லது அதற்கும் மேலான கெப்பாசிட்டி கொண்ட பேட்டரியை பேக் செய்யலாம்.

வெளுத்து விட்ட VIVO.. 8000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்!

விவோ எக்ஸ்500 சீரீஸின் கீழ் குறைந்தது நான்கு மாடல்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது - அவைகள் விவோ எக்ஸ்500இ (Vivo X500e), விவோ எக்ஸ்500 (Vivo X500), விவோ எக்ஸ்500 ப்ரோ (Vivo X500 Pro) மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) மாடல்கள் ஆகும்

விவோ எக்ஸ்500 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2026 செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையே அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதே லான்ச் டைம்லைனை தான் ஷாவ்மீ 18 சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் கொண்டுள்ளன. இது வருகிரா செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுவாரசியமாக ஷாவ்மீ 18 மற்றும் விவோ எக்ஸ்500 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களுமே சீன அறிமுகத்திற்கு பின்னர் இந்திய சந்தையிலும் அறிமுகமாகும். நினைவூட்டும் வண்ணம் விவோ எக்ஸ்300 ஆனது (விவோ எக்ஸ்400 மாடலை விவோ புறக்கணித்து விட்டது) கடந்த டிசம்பர் 2025 இல் இந்திய சந்தையில் அறிமுகமானது. இதேபோன்ற காலகட்டத்தில், அதாவது வருகிற டிசம்பர் மாதத்தில் நாம் விவோ எக்ஸ்500 ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை எதிர்பார்க்கலாம்.

விவோ எக்ஸ்500 சீரீஸின் டாப்-எண்ட் வேரியண்ட் ஆன விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.85-இன்ச் 2K LTPO டிஸ்பிளே
- LPDDR6 ரேம் (RAM)
- 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- 8000mAh பேட்டரி

ஷாவ்மீ 18 பேட்டரி: ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போனின் ப்ரோட்டோடைப் (Prototype), அதாவது பொறியியல் முன்மாதிரி ஆனது 7200mAh பேட்டரியை கொண்டிருப்பதாக டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக தகவல் கிடைத்துள்ளது. ஒப்பிடுகையில் இது ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனில் உள்ள 7,000mAh பேட்டரியை விட சற்று பெரிய கெப்பாசிட்டியாகும்

ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது எப்போது அறிமுகமாகும் ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் 2கே டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது மிக மெல்லிய, சீரான பெசல்களுடன் (bezels) வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் சூப்பர்பிக்சல் (SuperPixel) டிஸ்பிளே தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இதன் ஒட்டுமொத்த வடிவமைப்பும், ஸ்மார்ட்போனை கச்சிதமாகவும் கையாள்வதற்கு எளிதாகவும் வைத்திருக்கும் வகையில் அமையும்.

சிப்செட்டை பொறுத்தவரை இது ஷாவ்மீ 18 ப்ரோ மாடலில் உள்ள அதே 2என்எம் சிப் ஆன ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 இடம்பெறலாம். இதன் மூலம், நெக்ஸ்ட் ஜெனரேஷன் 2என்எம் சிப்செட் மற்றும் டூயல் 200-மெகாபிக்சல் கேமரா அமைப்பை கொண்ட மிக சில காம்பாக்ட் ஃபிளாக்ஷிப் (flagship) போன்களில் ஒன்றாக இது அமையும். கேமராக்களை பொறுத்தவரை ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போன் ஆனது பெரிய சென்சார்களுடன் கூடிய 200எம்பி ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.

முன்னதாக ப்ரோ மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்த 3X பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸை கொண்ட முதல் ஸ்டாண்டர்ட் ஷாவ்மீ மாடலாகவும் இது இருக்கும். மேலும், அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் முழுமையான நீர்-எதிர்ப்புத் திறன் (waterproofing) ஆகியவற்றையும் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கலாம். சார்ஜிங் வசதியை பொறுத்தவரை ஷாவ்மீ 18 ஸ்மார்ட்போன் ஆனது 100W வயர்டு சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கலாம்.

Best Mobiles in India

English summary
VIVO X500 Tipped to Launch With 8000mAh or Above Battery Could be Direct Competitor For Xiaomi 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X