கொஞ்சம் லேட்-ஆ சொல்லி இருக்க கூடாதா.. VIVO-வின் 2 புது போன்கள்.. வியாபாரத்துல மண்ணள்ளி போட்ட புது அப்டேட்!
ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்ட விவோ எக்ஸ்300 சீரிஸின் (VIVO X300 Series) இந்திய அறிமுகம் "விரைவில்" நடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் "ஏன் பா இதை விவோ எக்ஸ்300 சீரீஸ் அறிமுகம் ஆனதுக்கு அப்புறம் சொல்லி இருக்க கூடாதா!" என்று கேட்க வைக்கும்படியான ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.
அதென்ன அப்டேட்? நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்து உள்ள சமீபத்திய தகவல்களின் படி, விவோ எக்ஸ்500 சீரீஸ் (VIVO X500 Series) ஸ்மார்ட்போன்களின் பேட்டரி டிபார்ட்மென்ட்டில் "பெரிய அளவிலான மேம்பாடு" இருக்கும்.

விவோ எக்ஸ்400 சீரீஸ் என்ன ஆகிற்று? அறியாதோர்களுக்கு ஆசியாவின் சில பகுதிகளில் கலாச்சார காரணங்களுக்காக "4" என்கிற எண் பொதுவாக தவிர்க்கப்படுகிறது. எனவே விவோ நிறுவனம் விவோ எக்ஸ்400 சீரிஸ் (Vivo X400 Series) என்கிற பிராண்டிங் பெயரை தவிர்த்து நேரடியாக விவோ எக்ஸ்500 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம்
விவோ எக்ஸ்500 சீரிஸில் எவ்வளவு பெரிய பேட்டரி எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டரின் கூற்றுப்படி வரவிருக்கும் எக்ஸ் சீரீஸ் போன்களின் மூலம் விவோ நிறுவனம் அதன் பேட்டரி திறன்களை 7000mAh ஆக அதிகரிக்க முயற்சிக்கும். ஆக விவோ எக்ஸ்500 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் நாம் 7000mAh பேட்டரிகளை எதிர்பார்க்கலாம்.
நினைவூட்டும் வண்ணம் ஸ்டாண்டர்ட் விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் 6040mAh பேட்டரி உள்ளது மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனால் 6510mAh பேட்டரி உள்ளது. விவோ எக்ஸ்300 சீரீஸின் கீழ் இன்னும் அறிமுகம் செய்யப்படாத விவோ எக்ஸ்300 அல்ட்ரா மாடலில் 7000mAh பேட்டரி இடம்பெறுமா என்பது குறித்தும் எந்த உறுதிப்பாடும் இல்லை. ஆக பெரும்பாலும் 7000mAh பேட்டரி உடன் வரும் எக்ஸ் சீரீஸ் ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்500 மாடல்கள் இருக்கலாம்.
உலகளவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்
உலகளவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி
- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








