விவோ களமிறக்கிய புது 5ஜி போன்.. 6510எம்ஏஎச் பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்500 ப்ரோ (vivo X500 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. விரைவில் விவோ எக்ஸ்500 ப்ரோ போன் இந்தியாவிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்500 ப்ரோ அம்சங்கள் (vivo X500 Pro Specifications): 6.36-இன்ச் 1.5கே AMOLED டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1,260 x 2,750 பிக்சல்ஸ், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), எச்டிஆர் சப்போர்ட், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் (octa-core MediaTek Dimensity 9600 Pro chipset) உடன் விவோ எக்ஸ்500 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் பயனர்களை கவரும் வகையில் Mali-G2-Ultra-NX GPU கிராபிக்ஸ் ஆதரவும் இதில் உள்ளது.
குறிப்பாக 12ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் விவோ எக்ஸ்500 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. Origin OS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் மூலம் விவோ எக்ஸ்500 ப்ரோ போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
50எம்பி சோனி LYT-L910 LOFIC மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 64எம்பி LYT610 டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது விவோ எக்ஸ்500 ப்ரோ ஸ்மார்ட்போன். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. அதுவும் 4K வீடியோ ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது இந்த விவோ போன். மேலும் VS1மற்றும் V3+ இமேஜிங் சிப் ஆதரவும் இந்த போனில் உள்ளது.
இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார், இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் உடன் இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ போன் வெளியாகி உள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802 பிஇ, புளூடூத் 5.4,ஜிபிஎஸ், கலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS) உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன.
6510எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 90W ஃபிளாஷ் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் ஆதரவுகளுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 192 கிராம் ஆகும்.
விவோ எக்ஸ்500 ப்ரோ விலை
- 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்500 ப்ரோ மாடலின் விலை 6,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.92,970)-ஆக உள்ளது.
- 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்500 ப்ரோ மாடலின் விலை 7,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,07,275)-ஆக உள்ளது.
- 12ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்500 ப்ரோ மாடலின் விலை 8,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.1,21,580)-ஆக உள்ளது.
- செப்டம்பர் 29ஆம் தேதி முதல் சீனாவில் விவோ எக்ஸ்500 ப்ரோ போன் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications
