VIVO-வின் குட்டி மிளகாய்.. சின்ன டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 64MP பெரிஸ்கோப்.. புது மினி போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனத்தின் புதிய காம்பாக்ட் பிளாக்ஷிப் (அதாவது மினி ஸ்மார்ட்போன்) குறித்த முக்கிய விவரங்கள் வெளியாகி உள்ளன. அது விவோ எக்ஸ்500 ப்ரோ (Vivo X500 Pro) ஸ்மார்ட்போன் ஆகும். இந்த போன் விவோ எக்ஸ்500 ப்ரோ மினி (Vivo X500 Pro Mini) என்றும் அழைக்கப்படலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
விவோ எக்ஸ்500 ப்ரோ அல்லது விவோ எக்ஸ்500 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, விவோ நிறுவனம் வரவிருக்கும் 2என்ம் மீடியாடெக் (MediaTek Dimensity) சிப்செட் கொண்ட ஒரு புதிய ஸ்மால் ஸ்க்ரீன் கொண்ட பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உருவாக்கி வருகிறது.

இந்த போன் விவோ எக்ஸ்500 ப்ரோ அல்லது விவோ எக்ஸ்500 ப்ரோ மினி ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சிப்செட் - டிமென்சிட்டி 9600 ப்ரோ (Dimensity 9600 Pro) என்று அழைக்கப்படலாம்; இது மீடியாடெக்கின் அடுத்த தலைமுறை முதன்மை சிப்செட் ஆக இருக்கும். மேலும், ஸ்டாண்டர்ட் விவோ எக்ஸ்500 மாடலில், டிமென்சிட்டி 9500-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பான டிமென்சிட்டி 9600 (Dimensity 9600) பயன்படுத்தப்படும் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
விவோ எக்ஸ்500 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6,500mAh முதல் 6,600mAh வரையிலான பேட்டரி திறன் இருக்கும் என்றும், இது 7,000mAh வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இது விவோ எக்ஸ்300 ப்ரோவை விட சிறிய மேம்பாடாகவே இருக்கும், பெரிய அளவிலான மாற்றமாக இருக்காது. விவோ எக்ஸ்500 ப்ரோவில் உயர்தர கேமரா வன்பொருளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது.
கேமராவை பொறுத்தவரை, இந்த விவோ போனில் 64MP 85mm பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் பெரிய LOFIC ப்ரைமரி சென்சார் ஆகியவை இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை 50MP ப்ரைமரி கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைட் லென்ஸாகவும் இருக்கலாம்.
மற்ற லீக்ஸ் தகவல்களின் படி, விவோ எக்ஸ்500 ப்ரோவில் LTPO பேனல் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உடன் (refresh rate) கூடிய சிறிய அளவிலான 6.37-இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் தெரியவருகிறது. Vivo X300 மாடலில் பெரிய 6.78-இன்ச் டிஸ்ப்ளே இருந்த நிலையில், இது விவோ நிறுவனத்தின் மாறுபட்ட உத்தியைக் குறிக்கிறது.
ஸ்டாண்டர்ட் வழக்கமான விவோ எக்ஸ்500 மாடலும் சிறிய அளவிலான (compact) வடிவமைப்பிலேயே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது; அதாவது, இந்த சீரீஸில் பெரிய டிஸ்பிளே கொண்ட ஒரே மாடலாக விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) மட்டுமே இருக்கக்கூடும்.
விவோ எக்ஸ் போல்ட் 6 இந்திய அறிமுகம்: 7000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி உடன்.. அதாவது, இதுவரை வெளியான எந்த போல்டபிள் ஸ்மார்ட்போன்களிலும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பேட்டரி உடன் அறிமுகமான.. விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் போல்டபிள் ஸ்மார்ட்போன் (Foldable smartphone) ஆன விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) மாடலின் இந்திய அறிமுகம் மற்றும் விலை குறித்த தகவல் கிடைத்துள்ளது.
புக்-ஸ்டைல் (book-style) டிஸைனுடன் வரும் இந்த விவோ போல்ட் ஸ்மார்ட்போன் ஆனது வருகிற அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும், இதனுடன் எக்ஸ்-சீரீஸை சேர்ந்த மற்றொரு விவோ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகலாம் என்றும் டிப்ஸ்டர் சஞ்சு சவுத்ரி (Sanju Choudhary) தெரிவித்து உள்ளார். இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகமானதை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையாக இருந்தால், விவோ எக்ஸ் போல்ட் 6 ப்ரோ (Vivo X Fold 3 Pro) மற்றும் கடந்த ஆண்டு வெளியான விவோ எக்ஸ் போல்ட் 5 (Vivo X Fold 5) ஆகியவற்றைத் தொடர்ந்து, இந்தியாவில் அறிமுகமாகும் விவோவின் மூன்றாவது போல்டபிள் போனாக விவோ எக்ஸ் 6 போல்ட் இருக்கும்.
என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? லான்ச் டைம்லைன் உடன் சேர்த்து, மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர், விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் ரூ.1.5 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் கணித்துள்ளார். குறிப்பிடத்தக்க வண்ணம் இது மோட்டோரோலா ரேஸர் போல்ட் (Motorola Razr Fold) மாடலின் விலைக்கு இணையானது. அதே சமயம் சாம்சங் கேலக்ஸி இஸட் போல்ட் 7 (Samsung Galaxy Z Fold 7) மாடலை விட குறைவாகும்.


Click it and Unblock the Notifications