Home
Mobile

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. 8000எம்ஏஎச் பேட்டரி.. IP69 ரேட்டிங்.. எந்த மாடல்?

விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த போன் உலக சந்தையில் அறிமுகமாகும். அதன்பின்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். இந்நிலையில் இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Vivo X500 Pro Max Specifications): 50எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

6.85-இன்ச் பிளாட் டிஸ்பிளே உடன விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2கே ரெசல்யூஷன் (2K Resolution), 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மீடியாடெக் டைமன்சிட்டி 9600 சீரிஸ் சிப்செட் (Dimensity 9600-series chip) உடன் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

OriginOS 7 சார்ந்த ஆண்ட்ராய்டு 17 இயங்குதள வசதியுடன் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவரும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த விவோ போனில் உள்ளன.

யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் புதிய விவோ 16 போனில் உள்ளன. அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய போன் வெளியாகும்.

அடுத்த Vivo 5ஜி போன் ரெடி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?

8000mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W வயர்டு மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். குறிப்பாக இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
Vivo X500 Pro Max with 8000mAh Battery to be launched soon: Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X