Home
Mobile

VIVO-வின் புதிய கேமரா கிங்.. 50-MP LOFIC ப்ரைமரி + 200MP பெரிஸ்கோப் + 50MP அல்ட்ரா-வைட்.. எந்த மாடல்?

விவோ (VIVO) நிறுவனம் அதன் எக்ஸ் சீரீஸின் கீழ் வேற மாதிரியான ஒரு கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது விவோ எக்ஸ்500 சீரீஸின் கீழ் அறிமுகம் செய்யப்பட உள்ள விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (VIVO X500 Pro Max) மாடலாகும்.

விவோ எக்ஸ்500 சீரீஸில் ஒரு காம்பாக்ட் மற்றும் ஒரு பெரிய அளவிலான ஃபிளாக்ஷிப் மாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது (டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிகாச்சு வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி) இந்த சீரிஸின் பேஸிக் மாடல் 6.4-இன்ச் டிஸ்பிளேவுடன் வரலாம்; 6.9-இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ எக்ஸ்500 மேக்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்படலாம்.

VIVO-வின் புதிய கேமரா கிங்.. 50-MP LOFIC ப்ரைமரி + 200MP பெரிஸ்கோப்!

இந்நிலையில், 6.59-இன்ச் டிஸ்பிளே உடனான ஒரு நடுத்தர அளவிலான ஃபிளாக்ஷிப் மாடலை சேர்ப்பது குறித்தும் அந்த நிறுவனம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. அதுதான் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடல். இந்த ஸ்மார்ட்போன் இந்த சீரிஸின் "கேமரா கிங்" ஆக இருக்கும் என்பது போலவும் தெரிகிறது.

இந்த ப்ரோ மேக்ஸ் மாடல், 50-மெகாபிக்சல் LOFIC ப்ரைமரி கேமராவுடன் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அறிமுகமில்லாதவர்களுக்காக, LOFIC (Lateral Overflow Integration Capacitor) என்பது ஒரு சென்சார் தொழில்நுட்பமாகும். இது பிரகாசமான சூழல்களில் பிக்சல்கள் அதிக வெளிச்சத்திற்கு உள்ளாவதை தடுப்பதற்காக, உபரி எலக்ட்ரான்களை ஒரு மின்தேக்கியில் சேமித்து, டைனமிக் ரேஞ்சை கணிசமாக மேம்படுத்துகிறது.

இதோடு சேர்த்து விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடலில் உள்ள கேமரா அமைப்பில் 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. கலர் அக்யூரசி மற்றும் ஒயிட் பேலன்ஸை மேம்படுத்துவதற்காக, மல்டிஸ்பெக்ட்ரல் சென்சாரை சேர்ப்பது குறித்தும் விவோ பரிசீலித்து வருவதாகவும் மேற்குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார் . 50ம்பி + 200எம்பி கேமராவுடன் சேர்த்து 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவும் இடம்பெறலாம்.

இந்த சீரீஸின் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, விவோ எக்ஸ்500 மாடல் ஆனது டிமென்சிட்டி 9600 சிப்செட் மூலம் இயக்கப்படலாம், அதே நேரத்தில் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடலில் டிமென்சிட்டி 9600 ப்ரோ சிப்செட் இடம்பெறலாம். இந்த ஸ்மார்ட்போனின் லான்ச் டைம்லைனை பொறுத்தவரை, விவோ எக்ஸ்500 சீரிஸ் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் அறிமுகமாகலாம். அதே நிகழ்வில், நிறுவனத்தின் முதல் வ்லாக்கிங் கேமராவும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன அறிமுகத்திற்கு பின்னர் உலகளாவிய சந்தைகளுக்கு வரலாம்.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகமான விவோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை - விவோ வி70 எப்இ 5ஜி மாடல் இம்மாத தொடக்கத்தில் வெளியானது. இந்தியாவில் விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.40,999 மற்றும் ரூ.44,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது

விவோ வி70 எப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.83-இன்ச் 1.5K (2800×1260 பிக்சல்ஸ்) OLED டிஸ்பிளே
- 4என்எம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 7360-டர்போ சிப்செட்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஆரிஜின் ஓஎஸ் 6

- எப்/1.88 அபெர்ச்சர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 200 மெகாபிக்சல் 1/1.56-இன்ச் ப்ரைமரி சென்சார்
- எப்/2.2 அபெர்ச்சர், 120-டிகிரி பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆரா லைட் ஆதரவுடன் கூடிய 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா

- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
- நீருக்கடியில் புகைப்படம் எடுப்பதற்கான ஆதரவு
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் ஆதரவு கொண்ட 7,000mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Vivo X500 Pro Max to feature 50MP LOFIC Primary sensor 200MP periscope telephoto camera Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X