நவம்பருக்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. வருது Vivo X500 Pro Max மாடல்!
விவோ பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த கேமரா பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படி விவோ எக்ஸ்500 சீரிஸ் (Vivo X500 Series) மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இப்போது, இந்திய வெளியீடு மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடலின் கேமரா பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த விவோ எக்ஸ்500 சீரிஸ் குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சீன மார்கெட்டில் விவோ எக்ஸ்500 (Vivo X500), விவோ எக்ஸ்500 ப்ரோ (Vivo X500 Pro) மற்றும் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) ஆகிய மாடல்கள் வெளியாகிவிட்டன. இப்போது, குளோபல் மற்றும் இந்திய வெளியீட்டுக்கு ரெடியாகிவருகின்றன. இந்தியாவில் வருகிற நவம்பர் மாத இறுதியில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு ஏற்ப விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா பீச்சர்கள் கசிந்துள்ளன. இதில் 60FPS ஆட்டோபோகஸ் டிராக்கிங் ஸ்னாப்ஷாட் (AF Tracking Snapshot) கிடைக்க இருக்கிறது. 4K சினிமாடிக் ஸ்லோவ் மோஷன் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 960FPS வரையில் இப்படி வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே கசிந்துள்ளன.
குளோபல் மார்கெட்டில் வருகிற அக்டோபர் 28ஆம் தேதி இந்த விவோ எக்ஸ்500 சீரிஸ் வெளியாக இருக்கிறது. இதில் கிடைக்கும் பீச்சர்களே இந்திய வெர்ஷனில் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சீன வெர்ஷனில் கிடைத்த பீச்சர்கள் மற்றும் பட்ஜெட் இதிலும் இடம்பெற வாய்ப்புள்ளதால், அதை தெரிந்து கொள்ளலாம். விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் மாடலை முதலில் பார்க்கலாம்.
6.85 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு எச்டிஆர்10பிளஸ் (HDR10+), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 9600 ப்ரோ 2என்எம் (Octa Core Dimensity 9600 Pro 2nm) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
மாலி ஜி2 அல்ட்ரா என்எக்ஸ் ஜிபியு (Mali G2 Ultra NX GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 7 (Origin OS 7) கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி ஜீஸ் அல்ட்ரா டைனாமிக் மெயின் கேமரா + 200 எம்பி ஜீஸ் ஏபிஓ சூப்பர் டெலிபோட்டோ கேமராவை இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் கொடுத்துள்ளது.
50 எம்பி ஜீஸ் அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி மற்றுமி 8K வீடியோ ரெக்கார்டிங் கொண்ட மாடலாக விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது. இன்பிராரெட் சென்சார் மற்றும் இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கிடைக்கிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) கொடுக்கப்பட்டு இருக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 8000mAh பேட்டரி கிடைக்கிறது. சீனாவில் ரூ.1,00,000 பட்ஜெட்டில் வெளியாகியது. இந்தியாவிலும் ரூ.1 லட்சம் மேல் விலை இருக்கும்.


Click it and Unblock the Notifications
