Home
Mobile

வெளுத்து கட்டிய விவோ.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. புது Max ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

இதுவரை வெளியான விவோ ஸ்மார்ட்போன்களின் கேமராவை தூக்கி சாப்பிடும்படியான அப்கிரேட்களுடன் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் (Vivo X500 Pro Max) வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் கேமரா பீச்சர்கள் கசிந்து, ஒட்டுமொத்த கவனத்தையும் பெற்றுள்ளது.

விவோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் மாடல்களில் எப்போதும் பிரீமியம் கேமரா பீச்சர்கள் கொடுக்கப்படும். இதனாலேயே உலகளவில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்தியாவில் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன் வரையில் வெளியாகி இருக்கிறது. இப்போது, சீன மார்கெட்டில் விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் வெளியாக இருப்பது தெரிகிறது.

வெளுத்து கட்டிய விவோ.. 200MP கேமரா.. 8000mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே!

டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கேமரா பீச்சர்கள் கசிந்துள்ளன. இந்த பீச்சர்களை பார்த்தால் முன்னதாக வெளியாக விவோ ஸ்மார்ட்போன்களை தூக்கி சாப்பிடும்படி இருக்கிறது. ஏற்கனவே, பேட்டரி, சிப்செட் உள்ளிட்ட பீச்சர்கள் கசிந்தன. இப்போது, கேமரா பீச்சர்களும் கசிந்துவிட்டதால், அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள் (Vivo X500 Pro Max Specifications): 50 எம்பி மெயின் கேமராவில் சோனி லோபிக் (Sony LOFIC) சென்சார் கிடைக்க இருக்கிறது. இதில் லோபிக் டெக்னாலஜி (LOFIC Technology) கிடைப்பதால், ஷேடோ மற்றும் லைட்னிங் டீடெயில்களில் பிரீமியம் குவாலிட்டியை எதிர்பார்க்க முடியும். நேச்சுரல் லுக்கிங் கிடைக்கும்.

இது சோனி எல்ஒய்டி 838 (Sony LYT 838) சென்சாராகவும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 85எம்எம் போகல் லென்த் கொடுக்கும்படி 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவையும் இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க இருக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) வருகிறது.

இந்த கேமரா பீச்சர்களே இப்போது டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துள்ளன. இதை விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. முன்னதாக கசிந்த பீச்சர்களை பார்க்கையில், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9600 ப்ரோ (Octa Core MediaTe Dimensity 9600 Pro) சிப்செட் கொண்ட மாடலாக இந்த விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் இருக்கப் போகிறது.

6.85 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொடுக்கப்பட உள்ளது. 2K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. 8000mAh பேட்டரி கொண்டுள்ளது. சீன மார்கெட்டில் முதலில் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்தியாவில் ப்ரோ மாடல் வெளியாக வாய்ப்புள்ளது.

மேக்ஸ் மாடல் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஏற்கனவே, இந்தியாவில் வெளியான விவோ எக்ஸ்400 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்திட்டி 7300 (Octa Core MediaTek Dimensity 7300) சிப்செட்டை கொடுத்துள்ளது. 6.77 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது.

இது 3டி கர்வ்ட் டிசைனில் கிடைப்பதால், பிரீமியம் லுக் கொடுக்கும்படி இருக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5500mAh பேட்டரி கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி செகண்டரி ரியர் கேமரா உள்ளது. 32 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆகவே, விவோ எக்ஸ்500 ப்ரோ மேக்ஸ் ஏகப்பட்ட அப்கிரேட்களை கொடுத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vivo X500 Pro Max 50MP LOFIC Technology Camera 200MP Telephoto Camera Check Leaked Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X