விற்பனை தொடக்கம்: பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட விவோ எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ!

|

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட எக்ஸ்50, விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனையானது விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான் இந்தியா, பிளிப்கார்ட் உள்ளிட்ட ஆன்லைன் தளங்கள் மற்றும் ஆஃப்லைன் கடைகளில் தொடங்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ

விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனானது விவோ இந்தியா இ ஸ்டோர், அமேசான்.இன், பிளிப்கார்ட், பேடிஎம் மால், டாடா க்ளிக் மற்றும் முக்கிய ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம்

சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம்

விவோ ஸ்மார்ட்போனானது சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. தற்போது இந்த ஸ்மார்ட்போன்கள் இன்றுமுதல் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் கடைகளில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

ரூ.4000 கேஷ்பேக் சலுகை

ரூ.4000 கேஷ்பேக் சலுகை

அதுமட்டுமின்றி விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ ஸ்மார்ட்போன்களை எச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்ட்கள் மூலமாக வாங்கும்போது ரூ.4000 கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது. பஜாஜ், எச்டிஎப்சி, எச்டிபி, ஐடிஎப்சி, டிவிஎஸ் கிரெடிட் கார்ட் மற்றும் ஹோம் கிரெடிட் உள்ளிட்டவைகள் மூலம் ரூ.1458 என்ற வீத இஎம்ஐ மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

விவோ எக்ஸ் 50 சீரிஸ்

விவோ எக்ஸ் 50 சீரிஸ்

விவோ எக்ஸ் 50 மற்றும் எக்ஸ் 50 ப்ரோ செயலி, வடிவமைப்பு மற்றும் கேமரா என அனைத்திலும் மாறுபாட்டோடு உள்ளன. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 6.56 இன்ச் AMOLED டிஸ்ப்ளே முழு எச்டி + ரெசல்யூஷன் மற்றும் 90 ஹெர்ட்ஸ் மேம்படுத்தலுடன் உள்ளது. எக்ஸ் 50 பிளாட் அல்ட்ரா பேனலுடன் ஃப்ரோஸ்ட் ப்ளூ மற்றும் க்ளேஸ் பிளாக் கலர் விருப்பத்தில் வருகிறது.

ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி

ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி விவோ எக்ஸ் 50 ப்ரோ, இதன் பெயர் குறிப்பிடுவது போல் இந்த இரு மாடல்களும் சந்தையில் மிக மெலிதான 5 ஜி ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 256 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் வசதியோடு உள்ளது.

இந்தியா: சரியான நேரத்தில் களமிறங்கிய அதிநவீன ஸ்மார்ட் ஹெல்மெட்.!

விவோ எக்ஸ்50 ப்ரோ அம்சங்கள்

விவோ எக்ஸ்50 ப்ரோ அம்சங்கள்

டிஸ்பிளே: 6.56-இன்ச் முழு எச்டி AMOLED டிஸ்பிளே (2376 x 1080) சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 765பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு ரேம்: 8ஜிபி/12ஜிபி மெமரி: 128ஜிபி/256ஜிபி ரியர் கேமரா: 48எம்பி சோனி IMX598 சென்சார் + 13எம்பி லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் செல்பீ கேமரா: 32எம்பி இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 பேட்டரி: 4315எம்ஏஎச் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி

விவோ எக்ஸ்50 ப்ரோ விலை

விவோ எக்ஸ்50 ப்ரோ விலை

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ விலை CNY 4298 (இந்திய மதிப்பில் ரூ.45,000) 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்50 ப்ரோ விலை CNY 4698 (இந்திய மதிப்பில் ரூ.50,000)

விவோ எக்ஸ்50 அம்சங்கள் டிஸ்பிளே

விவோ எக்ஸ்50 அம்சங்கள் டிஸ்பிளே

6.56-இன்ச் முழு எச்டிAMOLEDடிஸ்பிளே (2376 x 1080) சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 765பிராசஸர் உடன் அட்ரினோ 620ஜிபியு ரேம்: 8ஜிபி/12ஜிபி மெமரி: 128ஜிபி/256ஜிபி ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி லென்ஸ்+ 13எம்பி லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் செல்பீ கேமரா: 32எம்பி எச்டிஆர் 10பிளஸ் ஆதரவு இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10 பேட்டரி: 4200எம்ஏஎச் 33வாட் பாஸ்ட் சார்ஜிங் 5ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி

3 டி சவுண்ட் டிராக்கிங்

3 டி சவுண்ட் டிராக்கிங்

இந்த ஸ்மார்ட்போன்கள் 3 டி சவுண்ட் டிராக்கிங் மூலம் சான்றளிக்கப்பட்ட ஹை-ஃபை சவுண்ட் ஆனால் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உடன் வரவில்லை. விவோ எக்ஸ் 50 சிறந்த சார்ஜிங்கிற்காக 4,200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் எக்ஸ் 50 ப்ரோ 4,315 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகின்றன, ஆனால் வயர்லெஸ் சார்ஜிங் அம்சம் கிடைக்கவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vivo X50, Vivo X50 Pro Sale Start in India via Online and Offline stores

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X