ஆஹா., விவோ எக்ஸ் 60 சீரிஸ் உடன் இந்த ஸ்மார்ட்போனும் வருதாம்!
விவோ எக்ஸ் 50 ப்ரோ+ ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் 60 தொடருடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விவோ எக்ஸ் 60 தொடர்
விவோ எக்ஸ் 60 தொடர் வெளியீடு மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்தில் நடைபெறும் எனவும் இதனுடன் விவோ எக்ஸ் 50 ப்ரோ+ இந்த தொடருடன் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ எக்ஸ் 50 ப்ரோ கடந்தாண்டு ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் அப்போது விவோ எக்ஸ் 50 ப்ரோ+ வெளியிடப்படவில்லை.

விவோ எக்ஸ் 50 ப்ரோ+
விவோ எக்ஸ் 50 தொடரில் விவோ எக்ஸ் 50 ப்ரோ+ மிகவும் சக்திவாய்ந்த சாதனமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. விவோ எக்ஸ் 50 ப்ரோ+ ஜூன் 2020 இல் விவோ எக்ஸ் 50 தொடருடன் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவில்லை.

ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி செயலி
விவோ எக்ஸ் 60 சீரிஸ் அறிமுகம் தொடர்பான விவரங்களை விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விவோ எக்ஸ் 50 ப்ரோ ப்ளஸ் அம்சங்கள் குறித்து பார்க்கையில் ஸ்னாப்டிராகன் 865 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
விவோ எக்ஸ் 50 தொடரில் இருக்கும் மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. பிற சாதனங்களைவிட விவோ எக்ஸ் 50 ப்ரோ+ சக்திவாய்ந்த சாதனமாக இருக்கும் எனவும் இந்த ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா
விவோ எக்ஸ் 50 ப்ரோ+ ஸ்மார்ட்போன் பின்புற கேமராக்கள் குறித்து பார்க்கையில் இது 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 32 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 13 மெகாபிக்சல் கேமராக்கள் ஆகியவைகளை கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4350 எம்ஏஎச் பேட்டரி, 44 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.


Click it and Unblock the Notifications