Vivo X50, V19 ஸ்மார்ட்போன்கள் மீது ரூ. 5000 மற்றும் ரூ. 3000 விலை குறைப்பு.. புது விலையில் எங்கே வாங்கலாம்..
விவோ நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சத்தமில்லாமல் அதன் விவோ எக்ஸ் 50 மற்றும் விவோ வி 19 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் மேல் அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் முறையே ரூ.5,000 மற்றும் ரூ. 3,000 வரை விலை குறைந்துள்ளது.

விவோ எக்ஸ் 50 மீது விலை குறைப்பு
விவோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போன்களின் மீது இப்போது உங்களுக்கு ரூ .5,000 வரை விலை குறைப்பு கிடைக்கிறது. அதேபோல், விவோ நிறுவனத்தின் விவோ வி19 ஸ்மார்ட்போன்களின் மீது ரூ .3,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைகள் பிப்ரவரி 1 (இன்று) முதல் நடைமுறைக்கு வருகின்றது.

விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போனின் புதிய விலை
விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி வேரியண்ட் மாடலின் புதிய விலை ரூ. 29,990 ஆகும். இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ. 32,990 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விவோ எக்ஸ் 50 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் ரூ. 34,990 என்ற விலையிலும், இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் விலை ரூ. 37,990 ஆகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

விவோ வி 19 ஸ்மார்ட்போனின் புதிய விலை
விவோ வி 19 ஸ்மார்ட்போன்களுக்கு ரூ. 3,000 விலைக் குறைப்புக்குப் பிறகு, விவோ வி 19 போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி வேரியண்ட் மாடல் இப்போது ரூ. 21,990 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் முந்தைய விலை ரூ. 24,990 ஆகும். அதேபோல், இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் மாடலின் விலை இப்போது ரூ .24,990 என்று குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன் ரூ. 27,990க்கு விற்பனை செய்யப்பட்டது.

உடனடியாக எங்கே வாங்கலாம்
புதிய விலைக் குறைப்பு தற்போது ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் கடைகளில் வழங்கப்படுகிறது. அதேபோல், இந்த புதிய விலை குறைப்பு தள்ளுபடி விலை இன்னும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பிரதிபலிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. விவோ எக்ஸ் 50 ஃப்ரோஸ்ட் ப்ளூ மற்றும் க்லேஸ் பிளாக் வண்ணங்களில் வருகிறது, விவோ வி 19 மிஸ்டிக் சில்வர் மற்றும் பியானோ பிளாக் கலர் விருப்பங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications