சொன்னபடியே 7000mAh பேட்டரி உடன் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்த Vivo.. எந்த மாடல்? என்ன விலை?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ 300எஸ் (Vivo X300s) ஸ்மார்ட்போனை நேற்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இப்போது இந்த புதிய விவோ 300எஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300எஸ் அம்சங்கள் (Vivo X300s Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட்
(MediaTek Dimensity 9500 chipset) உடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.78-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), எச்டிஆர் 10, 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
புதிய விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ர வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. அதுவும் இந்த போனின் ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன். அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ்(Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.
7000mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இந்த போனில் உள்ளன. 5ஜி 4ஜி எல்டிஇ, வைஃபை 7, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், ஏ-ஜிபஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. மேலும் விவோ எக்ஸ்300எஸ் போனில் பிரத்யேக V3 இமேஜிங் சிப் வசதி உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300எஸ் போனின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் ரூ.68,100). டைட்டானியம் பிளாக், சில்வர், ட்ரீம் கோர் பர்பிள் மற்றும் ஃபிலிம் கிரீன் ஆகிய கலர்களில் இந்த புதிய விவோ போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








