Home
Mobile

வந்துட்டான் செஞ்சிட்டான்.. 7000mAh பேட்டரி, 200MP கேமரா காம்பினேஷனில் முதல் Action கேமரா.. புது VIVO போன்!

2026 ஆம் ஆண்டில் - ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கி.. புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகங்கள் நிற்காமல் நடக்கப்போகிறது. சீனாவில்.. ஹானர் நிறுவனமானது 10080mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் உடன் 2026-க்கு பிள்ளையார் சுழி போடுகிறது. இந்தியாவில் ரியல்மியும், ரெட்மியும் ஜனவரி 6 ஆம் தேதி தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யவுள்ளன.

இதற்கிடையில் விவோ நிறுவனமானது 7000mAh பேட்டரி, 200 மெகாபிக்சல் கேமரா, பிராண்ட்டின் முதல் ஆக்ஷன் கேமரா (Action Camera) என்கிற முரட்டு காம்பினேஷனில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அது விவோ எக்300எஸ் (Vivo X300s) ஸ்மார்ட்போன் ஆகும்.

7000mAh பேட்டரி, 200MP கேமரா, முதல் Action கேமரா.. புது VIVO போன்!

விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை இடம்பெறலாம்? டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள சமீபத்திய தகவலின்படி, விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் ஆனது நான்கு பக்கங்களிலும் சம அளவிலான மெல்லிய பெசல்களால் சூழப்பட்ட ஒரு பிளாட் ஆன டிஸ்பிளேவை கொண்டிருக்கும். இது 6.78-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவை பேக் செய்யலாம்.

பின்புறத்தில், ஒரு வட்ட வடிவிலான கேமரா அமைப்பை கொண்டிருக்கும். அதில் 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவும், மிட்-டையர் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவும் இருக்கும். முன்னதாக வெளியான ஒரு தகவல் இது விவோ பிராண்டின் முதல் ஆக்ஷன் கேமராவை ஏக் செய்யும் என்றும் குறிப்பிடுகிறது. இருப்பினும் "கூறப்படும்" ஆக்ஷன் கேமராவின் அம்சங்கள் குறித்த உறுதியான விவரங்கள் இல்லை.

சிப்செட்டை பொறுத்தவரை இது டைமன்சிட்டி 9500 பிளஸ் கொண்டு இயங்கலாம். இது தற்போதுள்ள டைமன்சிட்டி 9500 சிப்செட்டின் "ஓவர்லாக் செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரியை பொறுத்தவரை விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் ஆனது சுமார் 7000mAh திறன் கொண்ட பெரிய பேட்டரியை கொண்டிருக்கலாம். கடைசியக இந்த ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் இன்-ஸ்கிரீன் பிங்கர் பிரிண்ட் சென்சார் மற்றும் நீர்ப்புகா திறன் கொண்ட சேசிஸ் போன்ற பிற அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

எப்போது அறிமுகம் செய்யப்படும்? விவோ நிறுவனம் வருகிற மார்ச் மாதத்தில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனை உலகளவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனுடன் விவோ எக்ஸ்300எஸ் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் விவோ எக்ஸ்300எஸ் மாடல் உலகளாவிய சந்தைகளை எட்டுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

2026 ஜனவரி என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன? ஹானர் பவர் 2 (Honor Power 2) ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது 10,080mAh பேட்டரியுடன் வரும். ஆனால் இந்திய அறிமுகம் குறித்து எந்த விவரங்களும் இல்லை.

ஜனவரி 6 ஆம் அன்று ரியல்மி 16 ப்ரோ சீரீஸ் (Realme 16 Pro Series) ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த சீரிஸின் கீழ் ரியல்மி 16 ப்ரோ 5ஜி (Realme 16 Pro 5G) மற்றும் ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி (Realme 16 Pro Plus 5G) ஆகிய 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

அதே ஜனவரி 6 ஆம் தேதி அன்று ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன் கீழ் ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) மற்றும் ரெட்மி நோட் 15 5ஜி 108 மாஸ்டர் பிக்சல் எடிஷன் (Redmi Note 15 5G 108 Master Pixel Edition) மாடல்கள் வெளியாகும்.

ஜனவரி 8 ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் டர்போ 6 (OnePlus Turbo 6) ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பின்னர் இது இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நோர்ட் பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். இது 80W வயர்டு மற்றும் 27W ரிவர்ஸ் வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 9,000mAh பேட்டரி ஆகிய முக்கிய அம்சங்களை பேக் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300s With 7000mAh Battery 200MP Camera Tipped to Launch Soon Along With Vivo X300 Ultra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X