ஒன்பிளஸ் ஆட்டத்தை முடிக்க வரும் புதிய Vivo 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 200எம்பி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 30-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியாவிலும் அறிமுகமாகும். மேலும் இந்த போனின் விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300எஸ் அம்சங்கள் (Vivo X300s Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்செட் (MediaTek Dimensity 9500 chipset) உடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

6.72-இன்ச் BOE Q10+ டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ர வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன். அதுவும் இந்த போனின் ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும். ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் விவோ எக்ஸ்300எஸ் போனில் உள்ளன.
விவோ எக்ஸ்300எஸ் போனில் 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) போன்ற வசதிகள் உள்ளன. மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.

7000mAh பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வே கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த சாதனத்தில் உள்ளன.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவும் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போனில் உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் வெளிவரும். விரைவில் ஒன்பிளஸ் நிறுவனம் பல புதிய போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதற்குப் போட்டியாக தான் விவோ நிறுவனம் இந்த புதிய 5ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளது.
photos credits: Digital Chat Station, vivo


Click it and Unblock the Notifications








