அதிரவிடும் விலை.. அறிமுகமானது புதிய Vivo 5ஜி போன்.. 7200எம்ஏஎச் பேட்டரி.. சோனி கேமரா.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் இன்று புதிய விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த போன் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சோனி கேமரா, 7200எம்ஏஎச் பேட்டரி, ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளியாகி உள்ளது. இப்போது விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300இ அம்சங்கள் (Vivo X300e Specifications): 6.59-இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் இந்த புதிய விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2750 x 1260 பிக்சல்ஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 10-பிட் கலர்ஸ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Snapdragon 8 Gen 5 chipset) உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதுவும் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.
OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display fingerprint sensor) வசதியுடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் இந்த புதிய விவோ போன் வெளியாகி உள்ளது.
50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ் டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய விவோ போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி சாம்சங் ஜேஎன்1 கேமராவும் உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளது. அதுவும் இந்த போனின் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும்.
7200எம்ஏஎச் பேட்டரி உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த விவோ ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார், VC கூலிங் போன்ற மேம்பட்ட அம்சங்கள் இந்த புதிய விவோ போனில் உள்ளன. மேலும் டூயல் சிம் 5ஜி, வைஃபை 7, ப்ளூடூத் 5.4, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் விவோ எக்ஸ்300இ போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 203 கிராம் ஆகும். மூன்லைட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் சன்லைட் ஆரஞ்சு கலர்களில் இந்த போனை வாங்க முடியும்.
விவோ எக்ஸ்300இ விலை
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300இ மாடலின் விலை 4,799 Yuan (இந்திய மதிப்பில் ரூ.68,283)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட விவோ எக்ஸ்300இ மாடலின் விலை 5,299 Yuan (இந்திய மதிப்பில் ரூ.75,397)-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications