Home
Mobile

செஞ்சி விட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. SONY கேமரா.. புது Vivo போன்.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் அல்ட்ரா பிரீமியம் கேமரா பீச்சர்களுடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஸ்மார்ட்போன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இருப்பினும், மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைத்ததால், பட்ஜெட் விலை பிரியர்களுக்கு ஏற்ப இல்லை. இதற்காகவே ஒரு புதிய மாடல் களமிறங்க இருக்கிறது.

விவோ எக்ஸ்300இ (Vivo X300e) ஸ்மார்ட்போன் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன்களை போலவே முதலில் சீனாவில் வெளியாக இருக்கிறது. பிறகு இந்திய உள்பட குளோபல் மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். இந்த நேரத்தில் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக பீச்சர்கள் கசிந்துள்ளன.

செஞ்சி விட்டாப்ல.. OLED டிஸ்பிளே.. 7000mAh பேட்டரி.. 90W சார்ஜிங்!

விவோ எக்ஸ்300இ அம்சங்கள் (Vivo X300e Specifications): 6.59 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளேவை இந்த விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Octa Core Snapdragon 8 Gen 5) சிப்செட்டை கொடுக்கிறது. ஜீஸ் (ZEISS) ஆப்டிக்ஸ் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) வருகிறது.

50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்8 சீரிஸ் சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 8 எம் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்க இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களை செய்து கொள்ள 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. 7015mAh பேட்டரி அல்லது 7100mAh பேட்டரியை கொடுக்க இருக்கிறது. 7000mAh கேபாசிட்டிக்கு மேல் உறுதியாகிறது.

இந்த பெரிய பேட்டரியுடன் 7.9 எம்எம் தடிமன் மட்டுமே கொடுக்க இருக்கிறது. மேலும், 203 கிராம் எடையில் வெளியாக இருக்கிறது. அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic In-display Fingerprint Sensor) கொடுக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துள்ளன. இது விவோ எக்ஸ்300 எப்இ மாடலைவிட பெரிய பேட்டரி கொடுக்கிறது.

அதேபோல டிஸ்பிளேவும் பெரிதாக இருக்கிறது. இருப்பினும், அதைவிட மலிவான விலைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது. சீன மார்கெட்டில் முதலில் கிடைக்கும். பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாவது குறித்த விவரங்கள் தெரியவரும். இந்தியாவில் ஏற்கனவே வெளியாகிய விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனில் 6500mAh பேட்டரி கிடைத்தது.

90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைத்தது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமராவை கொடுக்கிறது. மெயின் மற்றும் டெலிபோட்டோவில் சோனி சென்சார் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. ஆகவே, கேமராவில் எக்ஸ்300இ மாடலுடன் ஒத்துப்போகிறது.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்களுடன் ரூ.79,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதைவிட கம்மியாக விவோ எக்ஸ்300இ மாடல் கிடைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Vivo X300e With 50MP Camera Snapdragon 8 Gen 5 Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X