இதுக்கு தானே காத்திருந்தோம்.. நாளை அறிமுகமாகும் புது விவோ 5ஜி போன்.. 7015எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் நாளை (ஜூலை 27) விவோ எக்ஸ்300இ (Vivo X300e) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியா மற்றும் உலக நாடுகளிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போனின் முன்பதிவு ஏற்கனவே சீனாவில் தொடங்கி உள்ள நிலையில் தற்போது முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300இ அம்சங்கள் (Vivo X300e Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Gen 5 chipset) உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 829 ஜிபியு (Adreno 829 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த போனில் உள்ளது.

அதேபோல் 6.59-இன்ச் 1.5கே பிளாட் AMOLED டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate), 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.
குறிப்பாக 50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த போன் வெளிவரும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

7015எம்ஏஎச் பேட்டரி வசதி விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் இருக்கும். அதுவும் இந்த விவோ எக்ஸ்300இ போன் ரூ.50,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications