இதுக்கு தானே வெயிட்டிங்.. 7015mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்300இ (Vivo X300e) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இந்த மாதம் இறுதியில் சீனாவில் அறிமுகமாகும். அதன்பின்பு உலக நாடுகளில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300இ அம்சங்கள் (Vivo X300e Specifications): 6.59-இன்ச் டிஸ்பிளே உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்(120Hz Refresh Rate) மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை தரும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் (Qualcomm's Snapdragon 8 Gen 5 chipset) உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.
50எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளக்கும் என்றே 50எம்பி கேமரா உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது விவோ நிறுவனம்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance)உடன் இந்த போன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7015எம்ஏஎச் பேட்டரி வசதி விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி உடன் விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் இருக்கும். அதுவும் விவோ எக்ஸ்300இ போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். விலைக்குத் தகுந்த அம்சங்களும் இந்த புதிய விவோ போனில் இருக்கும். மேலும் இந்த புதிய விவோ எக்ஸ்300இ போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications