வந்துட்டான் VIVO.. பெர்ஃபார்மென்ஸ்-ல குறை வைக்காத 2 புதிய போன்கள்.. என்ன மாடல்கள்?
விவோ (Vivo) நிறுவனம் அதன் பிளாக்ஷிப் மற்றும் போல்டபிள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்து உள்ளது போல் தெரிகிறது. அதாவது விவோ நிறுவனம் அதன் விவோ எக்ஸ்300 சீரீஸின் கீழ் ஒரு புதிய மாடலையும் மற்றும் அதன் எக்ஸ் போல்ட் பிராண்டிங்கின் கீழ் ஒரு புதிய மாடலையும் அறிமுகம் செய்யவுள்ளது.
என்ன மாடல்கள்? விவோ எக்ஸ்300 சீரிஸின் விவோ எக்ஸ்300இ (Vivo X300e) என்கிற மாடலும், விவோ எக்ஸ் போல்ட் பிராண்டிங்கின் கீழ் விவோ எக்ஸ் போல்ட் 6 (Vivo X Fold 6) மாடலும் அறிமுகம் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.

IMEI லிஸ்டிங் வழியாக விவோ அதன் எக்ஸ்300 சீரீஸில் ஒரு புதிய மாடலை சேர்க்க உள்ள தகவலும், GSMA டேட்டாபேஸ் வழியாக விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனுக்கான பல மாடல் நம்பர்களும் ஒரே நேரத்தில் கிடைத்துள்ளது. இதன் வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் விரைவில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ எக்ஸ்300இ ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்? விவோ நிறுவனம் விவோ எக்ஸ்200 எப்இ மற்றும் விவோ எக்ஸ்200டி உள்ளிட்ட "இதே போன்ற" மாடல்களை மலிவு விலை பிளாக்ஷிப் மாடல்களை சந்தையில் நிலைநிறுத்தியுள்ளது. ஆக விவோ எக்ஸ்300இ மாடலிலும் இதேபோன்ற உத்தியைப் பின்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது சில ஹார்ட்வேர் சமரசங்களுடன் பிரீமியம் அனுபவத்தை வழங்கலாம்.
விவோ எக்ஸ் போல்ட் 6 ஸ்மார்ட்போனில் என்ன எதிர்பார்க்கலாம்? இது குவால்காம் நிறுவனத்தின் நெக்ஸ்ட் ஜெனெரஷன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம். நினைவூட்டும் வண்ணம் முன்னதாக வெளியான விவோ எக்ஸ் போல்ட் 5 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் வெளியானது.
விவோ எக்ஸ்300 மேக்ஸ் மற்றும் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களும் அறிமுகத்திற்கு தயார் ஆகின்றன: டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (Tipster Digital Chat Station) வழியாக கிடைத்துள்ள லேட்டஸ்ட் லீக்கின்படி விவோ எக்ஸ்300 மேக்ஸ் (Vivo X300 Max) மற்றும் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஆகிய 2 மாடல்களும் அறிமுகத்திற்கு தயாராகி வருகின்றன.
விவோ எக்ஸ்300 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது மிக மெல்லிய பெசல்களை கொண்ட டிசைன் உடன் 6.78-இன்ச் OLED 1.5K பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். கூடவே இதன் டிஸ்பிளேவில்அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே பிங்கர் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் இடம்பெறலாம்
கேமராக்களை பொறுத்தவரை இது 200-மெகாபிக்சல் ப்ரைமரி, அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் ஒரு மிட்-டையர் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஆகிய கேமராக்களை ஒரு வட்ட வடிவிலான கேமரா மாட்யூலுக்குள் உள்ளடக்கலாம். சிப்செட்டை பொறுத்தவரை இது டைமன்சிட்டி 9500 சிப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை இது மிகப்பெரிய 7,000mAh பேட்டரியை பேக் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக அறிமுகமான விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி
- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








