அக்.13-க்கு அப்புறம் இதுதான்.. 200MP மெயின்.. 200MP டெலிபோட்டோ.. 6510mA பேட்டரி.. 12 ஜிபி ரேம்.. எந்த மாடல்?
விவோ நிறுவனத்தின் மிட்-பிரீமியம் மாடல்களான விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகியவை அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. முதல்முறையாக 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 200 எம்பி டெலிபோட்டோ கொண்ட ஸ்மார்ட்போனாகவும் விவோ எக்ஸ்300 ப்ரோ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சீன மார்கெட்டில் அக்டோபர் 13ஆம் தேதி இந்த விவோ எக்ஸ்300 மற்றும் எக்ஸ்300 ப்ரோ மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இந்த மாடல்களில் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 எஸ்ஓசி (MediaTek Dimensity 9500 SoC) சிப்செட் கிடைக்க இருக்கிறது. இதுபோக கலர் மற்றும் டிசைன் விவரங்களை முன்னதாக வெளியாகின. அதில் ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா கிடைப்பது உறுதியாகியது.

அதேபோல எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் லைட் ப்ளூ (Light Blue) மற்றும் லைட் பிங்க் (Light Pink) கலர்களை பார்க்க முடிகிறது. விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனில் பிளாக் (Black) மற்றும் பெய்ஜ் (Beige) ஷேட்கள் இருக்கின்றன. இருப்பினும், கலர் வேரியண்ட்களின் பெயர்கள் உறுதியாகவில்லை. அதேபோல பிரீமியம் கேமரா சிஸ்டம் இதில் கிடைக்க இருக்கிறது.
அதாவது, டிசைன் மூலம் டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera) கிடைக்க இருப்பது உறுதியாகியது. இதற்கு முன்னதாகவே, விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலில் 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருப்பது தெரியவந்தது. அதிலும், மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி828 (Sony LYT828) சென்சார் கிடைக்கிறது.
அதேபோல டெலிபோட்டோ கேமராவில் சோனி எல்ஒய்டி602 (Sony LYT602) சென்சார் கிடைக்க இருப்பதும் தெரியவந்தது. அல்ட்ராசோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் 2.0 (Ultrasonic Fingerprint Sensor 2.0) இதில் கிடைக்க இருக்கிறது. இதுபோல ஒரு 200+200 கேமரா சிஸ்டம் முதல் முறையாக கிடைக்க இருப்பதாக டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் உறுதிப்படுத்தியது.
மேலும், 50 எம்பி அல்ட்ரா கிளியர் செல்பீ ஷூட்டர் கிடைக்க இருக்கிறது. இதிலும் ஜீஸ் ஆப்டிக்ஸ் மற்றும் 92 டிகிரி வைடு-ஆங்கிள் லென்ஸ் கிடைக்க இருப்பதும் தெரியவந்தது. இதில் ஆட்டோ போகஸ் (Auto Focus) கிடைக்க இருக்கிறது. மெயின் கேமரா மற்றும் பெரிஸ்கோப் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் எதிர்பார்க்கலாம்.
இதனால், கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்தியாவிலும் இந்த விவோ எக்ஸ்300 மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. மேலும், விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6510mA பேட்டரி, 12 ஜிபி ரேம் + 12 ஜிபி விர்ச்சுவல் ரேம் கிடைக்க இருப்பதும், 512 ஜிபி மெமரி கிடைக்க இருப்பதும் கசிந்துள்ளது.
6.31 இன்ச் எல்டிபிஓ (LTPO) அமோலெட் டிஸ்பிளே எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. இருப்பினும், பட்ஜெட் விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால், இந்தியாவில் ஏற்கனவே வெளியான விவோ எக்ஸ்200 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.65,999 பட்ஜெட்டில் இருக்கிறது.
அதேபோல விவோ எக்ஸ்200 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.94,999 பட்ஜெட்டில் இருக்கிறது. இது அறிமுகம் செய்யப்பட்டபோது கிடைத்த விலையாகும். இப்போது, விலை குறைப்புகள், பேங்க் டிஸ்கவுண்ட்கள் போக மேலும் குறைவான விலைக்கு கிடைக்கின்றன. ஆகவே, எக்ஸ்300 மாடலை ரூ.69,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
அதேபோல விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலை ரூ.99,999 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மாறுபடும். அக்டோபர் 13ஆம் தேதி வெளியாக இருப்பதால், அடுத்தடுத்து பீச்சர்களுடன் பட்ஜெட் விவரங்களும் வெளியாகும். அப்போது, இந்திய விலையை ஒப்பிட்டு பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








