Home
Mobile

அக்.30-க்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்.. AMOLED டிஸபிளே.. எந்த மாடல்?

விவோ நிறுவனத்தின் பிரீமியம் மாடல்களான விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஸ்மார்ட்போன்களின் குளோபல் வெளியீட்டு தேதி உறுதியாகி இருக்கிறது. 200 எம்பி கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, ஜீஸ் ஆப்டிக்ஸ், IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் சிப்செட் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த மாடல்கள் சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிவிட்டன. கேமரா பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக இருப்பதால், குளோபல் வெளியீட்டின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. இப்போது, அக்டோபர் 30ஆம் தேதி குளோபல் மார்கெட்டில் வெளியாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதற்கு அடுத்து நவம்பர் மாதத்தில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றனால், எக்ஸ்200 சீரிஸ் இங்கு வெளியாகி இருக்கிறது.

அக்.30-க்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்!

ஆகவே, இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்கள் கட்டாயம் இந்திய மார்கெட்டில் கிடைக்கும். பீச்சர்களின் பெரிய மாற்றம் இருக்காது. விலையில் மட்டும் வித்தியாசங்கள் இருக்கலாம். சீன மார்கெட்டில் விவோ எக்ஸ்300 மாடலின் ஆரம்ப விலை ரூ.55,000 பட்ஜெட்டில் இருந்தது. அதேபோல விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலின் ஆரம்ப விலை ரூ.66,000 பட்ஜெட்டில் இருக்கிறது.

ஆனால், இந்தியாவில் விவோ எக்ஸ்300 மாடலின் விலை ரூ.70,000 பட்ஜெட்டிலும், விவோ எக்ஸ்300 ப்ரோ மாடலின் விலை ரூ.1,00,000 பட்ஜெட்டிலும் இருக்க வாய்ப்புள்ளதாக மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், முன்னதாக வெளியான விவோ எக்ஸ்200 மாடலின் இந்திய விலையே ரூ.65,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, அதைவிட கூடுதல் விலைக்கே இதை எதிர்பார்க்க முடியும்.

அதேபோல இந்தியாவில் விவோ எக்ஸ்200 ப்ரோ மாடலின் விலை ரூ.94,999ஆக இருக்கிறது. இதில் அறிமுக சலுகை, பேங்க் தள்ளுபடி போன்ற சலுகைகள் அதிகமாக கிடைத்தது. ஆகவே, ரூ.10,000 வரையில் விலை குறைவாக வாங்க முடிந்தது. அதேபோல விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் வெளியாகினாலும், அதற்கும் ரூ.10,000 வரையில் அறிமுக சலுகைகள் கிடைக்கும்.

அக்.30-க்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்!

விவோ எக்ஸ்300 அம்சங்கள் (Vivo X300 Specifications): ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் (Octa Core Dimensity 9500 3nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) பேஸ்டு ஓரிஜின் ஓஎஸ் 6 (Origin OS 6) கிடைக்கிறது. 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா வருகிறது.

50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா சாம்சங் சென்சாருடன் + சோனி சென்சாருடன் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா உள்ளது. ஜீஸ் ஆப்டிக்ஸ், வி3பிளஸ் இமேஜிங் சிப் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. 6040mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 40W வயர்லெஸ் சார்ஜிங் உள்ளது. IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

விவோ எக்ஸ்300 ப்ரோ அம்சங்கள் (Vivo X300 Pro Specifications): 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே மற்றும் 4500 பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் சிப்செட், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் ஓர்ஜின் ஓஎஸ் 6 கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது.

மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. சாம்சங் எச்பிபி சென்சார் மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் கொண்ட 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. இதிலும் வி3பிளஸ் சிப் கிடைக்கிறது. மேலும், விஎஸ்1 டூயல் இமேஜிங் சிப் கிடைக்கிறது. 6510mAh பேட்டரி, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 X300 Pro With 200MP Camera Global Launch on October 30 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X