Home
Mobile

அக்.30 குறிச்சாச்சு.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. 6040mAh பேட்டரி.. புது Vivo X300 சீரிஸ்.. கலர் & ஸ்டோரேஜ்?

விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஸ்மார்ட்போன்களின் குளோபல் வெளியீடு வரும் அக்டோபர் 30ஆம் தேதி நடக்கிறது. இவற்றின் பீச்சர்கள் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டன. இப்போது, கலர்கள் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன. குளோபல் மார்கெட்டில் வெளியாகி பிறகு, இந்திய மார்கெட்டில் கிடைக்க இருப்பதால் இவற்றின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இந்த விவோ மாடல்களின் பீச்சர்கள் மற்றும் விலை எப்படி இருக்கும்? முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இப்போது, குளோபல் வெளியீட்டுக்கு ரெடியாகவிட்டன. பீச்சர்கள் பெரும்பாலும் சீன வேரியண்ட்டை போலவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஸ்டோரேஜ் மற்றும் கலர் வேரியண்ட்களில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது, அந்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

அக்.30 குறிச்சாச்சு.. 200MP கேமரா.. 90W சார்ஜிங்.. 6040mAh பேட்டரி!

ஆகவே, விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் ஹாலோ பிங்க் (Halo Pink), ஐரிஸ் பர்பிள் (Iris Purple), மிஸ்ட் ப்ளூ (Mist Blue) மற்றும் பாண்டம் பிளாக் (Phantom Black) ஆகிய கலர்கள் குளோபலில் வெளியாக இருக்கின்றன. 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. ஆகவே, 1 டிபி வேரியண்ட் சீன மார்கெட்டில் மட்டுமே கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது.

விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனில் மிஸ்ட் ப்ளூ (Mist Blue), பாண்டம் பிளாக் (Phantom Black), கிளவுட் ஒயிட் (Cloud White) மற்றும் டியூன் பிரவுன் (Dune Brown) ஆகிய கலர்களில் வெளியாக இருக்கிறது. விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனை போலவே இதிலும் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி மெமரி கிடைக்க இருக்கிறது. ஆனால், சில நாடுகளில் குறிப்பிட்ட கலர்கள் கிடைக்க இருக்கிறது.

அதாவது, ஆஸ்திரேலியாவில், விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனில் பாண்டம் பிளாக் மற்றும் டியூன் பிரவுன் கலர்கள் மட்டுமே கிடைக்க இருக்கிறது. மூன்றாவதாக ரெட் கலரில் பிரத்யேகமாக கிடைக்க இருக்கிறது. ஆகவே, அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப கலர்களில் மாற்றம் இருக்கும் என்பது தெரிகிறது. இப்போது, மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.

விவோ எக்ஸ்300 அம்சங்கள் (Vivo X300 Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (Octa Core 3nm MediaTek Dimensity 9500) சிப்செட் கிடைக்கிறது. 6.31 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது.

ஜீஸ் ஆப்டிக்ஸ் சப்போர்ட் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது. 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6040mAh பேட்டரி கிடைக்கிறது. சீன மார்கெட்டில் ரூ.55,000ஆக ஆரம்ப விலை உள்ளது.

விவோ எக்ஸ்300 ப்ரோ அம்சங்கள் (Vivo X300 Pro Specifications): ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட மீடியாடெக் டைமன்சிட்டி 9500 3என்எம் சிப்செட் கிடைக்கிறது. 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் + 200 எம்பி டெலிபோட்டோ உள்ளது. 6510mAh பேட்டரி, 90W சார்ஜிங் உள்ளது. சீனாவில் ஆரம்ப விலை ரூ.66,000ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 X300 Pro Color And Storage Variants Revealed Ahead of Launch Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X