தலைவன் மிரட்டி விட்டாப்ல.. 200MP மெயின்.. 200MP டெலிபோட்டோ.. 4K 120FPS லாக் ரெக்கார்டிங்.. எந்த மாடல்?
சினிமாடிக் தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளும்படியான பீச்சர்களுடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கேமரா, டிஸ்பிளே, சிப்செட் மற்றும் கான்பிரேஷன் குறித்த விவரங்கள் கசிந்ததை தொடர்ந்து, இந்த வீடியோ ரெக்கார்டிங் பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியாகி உள்ளன.
விவோ எக்ஸ்200 அல்ட்ரா (Vivo X200 Ultra) ஸ்மார்ட்போனின் மிகப்பெரும் வரவேற்புக்கு பிறகு விவோ எக்ஸ்300 அல்ட்ரா மீதான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் மட்டுமல்லாமல், வீடியோ ரெக்கார்டிங், ப்ரொபஷனல் போட்டோகிராபி கிட் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, சினிமாடிக் லெவல் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கும்.

இதில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா அடுத்த அப்கிரேடுக்கு சென்றுவிட்டது. முந்தைய மாடலான விவோ எக்ஸ்200 அல்ட்ராவில் புல் போகல் லென்த் கொடுக்கப்பட்டு 4கே 60எப்பிஎஸ் லாக் வீடியோ ரெக்கார்டிங் (4K 60fps Log Video Recording) கிடைத்தது. ஆனால், விவோ எக்ஸ்300 அல்ட்ராவில் 4கே 120எப்பிஎஸ் லாக் வீடியோ ரெக்கார்டிங் (4K 120fps Log Video Recording) கிடைக்கிறது.
ஆகவே, வீடியோ ரெக்கார்டிங் மட்டுமல்லாமல், போஸ்ட் ப்ரொடெக்சனின் போது வீடியோ எடிட்டிங் செய்யும்போதும், சினிமாடிக் லெவல் அவுட்புட்டை இந்த 4கே 120எப்பிஎஸ் லாக் வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கும். இதை விவோ தயாரிப்பு மேலாளர் ஹான் பாக்ஸியாவோ உறுதிப்படுத்தி உள்ளார். ஃபுல் போகல் லென்த் கிடைப்பதால், மல்டிபிள் லென்ஸ் பயன்படுத்தலாம்.
மேலும், ப்ரொபஷனல் வீடியோ மோட் (Professional Video Mode) கொண்ட மாடலாகவும் இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா இருக்கப் போகிறது. கேமராவில் அதிக கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. வருகிற மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே தேதியில் விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) மற்றும் விவோ பேட் 6 ப்ரோ (Vivo Pad 6 Pro) வெளியாகும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ரேம் மற்றும் மெமரி விவரங்கள் கசிந்தன. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் மற்றும் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்க உள்ளது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட்டும் கிடைக்க உள்ளது. கிரீன் (Geen), பிளாக் (Black), சில்வர் (Silver) கலர்கள் இருக்கின்றன.
சோனி எல்ஒய்டி 901 (Sony LYT 901) சென்சாருடன் 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க உள்ளது. 400 எம்எம் விவோ ஜீஸ் டெலிகன்வர்டெர் ப்ரொபஷனல் போட்டோகிராபி கிட் உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கொண்ட ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கொடுக்க உள்ளது. 6.82 இன்ச் பிஓஇ ஓஎல்இடி டிஸ்பிளே உள்ளது.
விவோ எக்ஸ்200 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X200 Ultra Specifications): ஸ்னாப்டிராகன் 8 எலைட் 3என்எம் (Snapdragon 8 Elite 3nm) சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுத்து உள்ளது. 50 எம்பிக்கான செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. 6.82 இன்ச் (3168 x 1440 பிக்சல்கள்) எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளே கிடைக்கப்பட்டு உள்ளது.
ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் உள்ளது. 6000mAh பேட்டரி மற்றும் 90W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.77,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனை அதைவிட கூடுதல் விலைக்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








