Home
Mobile

200MP + 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. கேமரா சாம்ராஜ்யமே மிரள வருது X300 அல்ட்ரா.. புது Vivo ஸ்மார்ட்போன்!

ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மாடல்களிலும் இதுவரையில் கொடுப்படாதபடி 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட மாடலாக விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) களமிறங்க இருக்கிறது. சோனி சென்சார், சாம்சங் சென்சார், ஜீஸ் ஆப்டிக்ஸ் போன்ற மற்ற பீச்சர்களிலும் அல்ட்ரா பிரீமியம் காட்டி இருக்கிறது. இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ராவின் கேமரா குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

விவோ நிறுவனத்தில் அல்ட்ரா பிரீமியம் மாடலாக இந்த எக்ஸ்300 அல்ட்ரா வெளியாக இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் விவோ எக்ஸ்300 (Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) ஆகிய மாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, இந்த ஸ்மார்ட்போன்களின் பீச்சர்கள் வெளியாக தொடங்கிவிட்டன.

200MP + 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. கேமரா சாம்ராஜ்யமே மிரள வருது!

ஆனால், இதை எக்ஸ்300 அல்ட்ரா அப்படியே தூக்கி சாப்பிட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் வெளியாகவில்லை. அடுத்தாண்டின் முதல் பாதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முன்னதாகவே அதனுடைய கேமரா பீச்சர்கள் கசிந்துள்ளன. டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் மூலம் இந்த பீச்சர்கள் தெரியவந்துள்ளன.

முந்தைய பிரீமியம் எக்ஸ் சீரீஸ் மாடல்களை போலவே இதிலும் டிரிபிள் ரியர் கேமரா (Triple Rear Camera) கிடைக்க இருக்கிறது. ஆனால், டெலிபோட்டோ கேமரா அப்கிரேட் செய்யப்பட இருக்கிறது. அதாவது, முன்பு 50 எம்பி டெலிபோட்டோ கேமரா மட்டுமே கிடைத்தது. ஆனால், விவோ எக்ஸ்300 அல்ட்ராவில் 200 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது.

ஆகவே, விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா + 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. ஸ்மார்ட்போன் மார்கெட்டில் முதல் முறையாக 200 எம்பி + 200 எம்பி கேமரா கொண்ட மாடலாகவும் இது இருக்கும் என்று டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் சொல்கிறது.

மேலும், வழக்கமாக கிடைக்கும் ஜீஸ் ஆப்டிக்ஸ் இதிலும் கிடைக்க இருக்கிறது. 200 எம்பி மெயின் கேமராவில் 35எம்எம் போகல் லென்த் கொண்ட சோனி எல்ஒய்டி 990 (Sony LYT 990) சென்சார் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்க இருக்கிறது. மேலும், 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் சாம்சங் எச்பிபி (Samsung HPB) சென்சார் வர இருக்கிறது.

இந்த கேமராக்களில் விவோ நிறுவனத்தின் செல்ப்-டெவலப்ட் வீடியோ மற்றும் இமேஜிங் சிப் கிடைக்க இருக்கிறது. இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) கிடைக்க இருக்கிறது. இதற்கு முன்னதாக வெளியாக இருக்கும் விவோ எக்ஸ்300 மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் கேமரா பீச்சர்களை பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனில் 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. அல்ட்ரா வைடு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. மெயின் கேமராவில் சாம்சங் எச்பிபி சென்சார் கிடைக்க இருக்கிறது. பெரிஸ்கோப் கேமராவில் சோனி எல்ஒய்டி 602 ( Sony LYT 602) சென்சார் கிடைக்க இருக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா வர இருக்கிறது.

எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனை பொறுத்தவரையில், சோனி எல்ஒய்டி 828 (Sony LYT 828) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் சாம்சங் எச்பிபி சென்சாருடன் 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா உள்ளது, அல்ட்ரா வைடு விவரங்கள் வெளியாகவில்லை. ஓரிரு வாரங்களில் முழு விவரங்கள் தெரியவரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Ultra With 200MP Main Camera 200MP Periscope Telephoto Leak Reveals Camera Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X