மார்ச் 30-க்கு அப்புறம் இதுதான்.. 200MP கேமரா.. 16GB ரேம்.. 1TB மெமரி.. புது Vivo ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த விவோ பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த தேதி கசிந்துவிட்டது. விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனானது, எப்போது வெளியாகும் என்பது மட்டுமல்லாமல், ரேம், ஸ்டோரேஜ் மற்றும் என்னென்ன கலர்களில் கிடைக்கும் என்பதும் தெரியவந்துள்ளது. டபுள் ட்ரீட்டாக கூடுதலாக பல்வேறு ப்ரொடெக்ட்கள் அறிமுகமாக இருக்கின்றன.
வருகிற மார்ச் 30ஆம் தேதியன்று விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனுடன் விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) ஸ்மார்ட்போன் மற்றும் விவோ பேட் 6 ப்ரோ (Vivo Pad 6 Pro) வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, விவோ பிரியர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்க வாய்ப்புள்ளது.

மேலும், இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா, விவோ எக்ஸ்300எஸ் மற்றும் விவோ பேட் 6 ப்ரோ மாடல்களின் கான்பிகிரேஷன்கள் மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்களும் கசிந்துள்ளன. இதில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது, பிரீமியம் செக்மெண்ட்டில் வெளியாக இருப்பது தெரிகிறது. முதலில் அந்த ஸ்மார்ட்போனின் கான்பிகிரேஷன்களை பார்ப்போம்.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா ரேம், ஸ்டோரேஜ்
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன. மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட மாடல்களும் கிடைக்க இருக்கின்றன. கிரீன் (Geen), பிளாக் (Black) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள்
200 எம்பி ரியர் கேமராவுடன் இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது. ப்ரொபஷனல் கேமரா கிட் கொடுக்க உள்ளது. ஆகவே, 400 எம்எம் விவோ ஜீஸ் டெலிகன்வர்டெர் ப்ரொபஷனல் போட்டோகிராபி கிட் (Vivo ZEISS Teleconverter Professional Photography Kit) கிடைக்க உள்ளது. 200 எம்எம் + 400 எம்எம் செட்டப் செய்து கொள்ளலாம்.
6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. 2K+ ரெசொலூஷன் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்க உள்ளது. 200 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டி 901 (Sony LYT 901) சென்சார் கிடைக்கிறது. 200 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமராவில் எச்பிபி சென்சார் கிடைக்க உள்ளது.
இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. ஆனால், போட்டோகிராபி கிட் மற்றும் ஜீஸ் ஆப்டிக்ஸ் கேமரா சிஸ்டம் கிடைக்க இருப்பது உறுதியாகும். விவோ ஸ்மார்ட்போன்களில் அதிக விலை கொண்ட மாடலாகவும் இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா இருக்க வாய்ப்புள்ளது. இப்போது, விவோ 300எஸ், விவோ பேட் 6 ப்ரோ மாடல்களை பார்ப்போம்.
விவோ எக்ஸ்300எஸ் ரேம், ஸ்டோரேஜ்
12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மற்றும் 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட வேரியண்ட்களுடன் இந்த விவோ எக்ஸ்300எஸ் வெளியாக இருக்கிறது. கிரீன் (Green), பர்பிள் (Purple), ஒயிட் (White) மற்றும் பிளாக் (Black) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது.
விவோ பேட் 6 ப்ரோ ரேம், ஸ்டோரேஜ்
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கிடைக்க உள்ளது. மேலும், 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொடுக்க உள்ளது. ப்ளூ (Blue), பர்பிள் (Purple) மற்றும் கிரே (Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த விவரங்கள் கசிந்தவை மட்டுமே.


Click it and Unblock the Notifications








