Home
Mobile

DSLR-க்கு கும்பிடு.. 200MP டெலிபோட்டோ.. 400எம்எம் போகல் லென்த்.. டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்.. எந்த மாடல்?

டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிகரான போகல் லென்த், டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர், 200 எம்பி டெலிபோட்டோ கேமராவுடன் விவோ (Vivo) நிறுவனத்தின் விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மற்றும் விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) ஆகிய ஃபிளாக்சிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக இருக்கின்றன. இப்போது, டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் டிசைன் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளது.

விவோ நிறுவனத்தின் எக்ஸ் சீரிஸ் மாடல்கள் ஃபிளாக்சிப் கேமரா பீச்சர்களுடன் வெளியாகி வருகின்றன. ஜீஸ் ஆப்டிக்ஸ், டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் உள்ளிட்ட ஹார்ட்வேர் லெவல் அப்கிரேட்களையும் பார்க்க முடிகிறது. இப்போது, நெக்ஸ்ட்-ஜெனரேஷன் ஃபிளாக்சிப் இமேஜிங் ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன.

DSLR-க்கு கும்பிடு.. 200MP டெலிபோட்டோ.. 400எம்எம் போகல் லென்த்!

இதில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மார்ச் 30ஆம் தேதி வெளியாகும் என்று மார்க்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஏற்ப விவோ நிறுவனமானது, கேமரா பீச்சர்களை உறுதி செய்து வருகிறது. இப்போது, விவோ தயாரிப்பு மேலாளர் ஹான் போக்சியாவோ டிசைனை உறுதி செய்துள்ளார்.

2 மாடல்களிலும் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் கிடைக்க உள்ளது. விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது ப்ரோபஸ்னல் வி கேமரா போன் (Professional V Camera Phone) என்றும் விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போனானது சூப்பர் வி கேமரா போன் (Super V Camera Phone) என்றும் பிராண்டிங் செய்யப்பட்டு உள்ளது. வி என்பது விவோவை குறிக்கிறது.

இந்த மாடல்கள் ஃபிலிம் கிரீன் (Film Green) கலரை கொண்டுள்ளது. டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்கள் மெட்டாலிக் பினிஷிங்கில் கிரே ஷேட் கொடுக்கிறது. விவோ எக்ஸ்300 அல்ட்ராவில் கெனான் 400 டெலிபோட்டோ சிஸ்டம் (Cannon 400 Telephoto System) உள்ளது. அதாவது, 400 எம்எம் போகல் லென்த் கொண்ட கேனான் டெலிகன்வெர்ட்டர் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஆகவே, பிரீமியம் போர்டபிள் ஜூமிங் மற்றும் சினிமாடிக் லெவல் வீடியோ ரெக்கார்டிங் எதிர்பார்க்கலாம். மேலும், 4கே 120எப்பிஎஸ் 10 பில்ட் லாக் (4K 120fps 10 bit Log) வீடியோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. ஆகவே, சினிமாடிக் எடிட்டிங் லெவலுக்கு அவுட்புட் எதிர்பார்க்கலாம். டால்பி விஷன் சப்போர்ட் கொண்ட ரெக்கார்டிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும், 200 எம்எம் போகல் லென்த் சப்போர்ட் கொண்ட டெலிகன்வெர்ட்டரும் கிடைக்க உள்ளது. இந்த பீச்சர்களுடன் லெய்கா ஆப்டிகஸ் கொடுக்கப்பட உள்ளது. இந்த பிராண்ட்டிங் டிசைனிலும் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த பீச்சர்கள் மற்றும் டிசைன் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு உள்ளன. இப்போது, எதிர்பார்க்கப்படும் பீச்சர்களை பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள்

6.82 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 2K+ ரெசொலூஷன், 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் பிளாட் டிஸ்பிளே டிசைன் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமராவானது சோனி எல்ஒய்டி 901 (Sony LYT 901) சென்சாருடன் வருகிறது. 200 எம்பி டெலிபோட்டோ எச்பிபி சென்சாருடன் வருகிறது.

விவோ எக்ஸ்300எஸ் அம்சங்கள்

6.78 இன்ச் பிஓஇ கியூ10 பிளஸ் (BOE Q10 Plus) ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க உள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 200 எம்பி கேமரா வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி 9500 (MediaTek Dimensity 9500) சிப்செட் கிடைக்கிறது. 7100mAh பேட்டரி கொடுக்கப்பட உள்ளது. மார்ச் 30ஆம் தேதி சீன மார்கெட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவோ நிறுவனம் விரைவில் உறுதி செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Ultra Vivo X300s With Teleconverter Kit As V Camera Phone Confirmed Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X