Home
Mobile

வஞ்சி செஞ்ச Vivo.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 6600mAh பேட்டரி.. புது Vivo போன்கள்.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஆகிய ஸ்மார்ட்போன்களின் இந்திய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. கூடுதலாக கேமரா, சிப்செட், பேட்டரி, டிசைன், கலர் விவரங்களும் உறுதியாகி இருக்கின்றன. இந்த விவோ எக்ஸ்300 சீரிஸ் மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வருகிற மே 6 ஆம் தேதியன்று விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் வெளியாக உள்ளன. அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கின்றன. ஜீஸ் மாஸ்டர் லென்ஸ்கள் (ZEISS Master Lenses) கிடைக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

வஞ்சி செஞ்ச Vivo.. 200MP கேமரா.. 100W சார்ஜிங்.. 6600mAh பேட்டரி!

விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X300 Ultra Specifications): 200 எம்பி மெயின் கேமராவில் சோனி எல்ஒய்டிஐஏ 901 (Sony LYTIA 901) சென்சார் கிடைக்கிறது. 35எம்எம் போகல் லென்த் கொண்ட ஜீஸ் டாகுமெண்டரி கேமராவாக இருக்கிறது. 200 எம்பி டெலிபோட்டோ கேமராவில் அல்ட்ரா சென்சிங் சென்சார் எச்பி0 (Ultra Sensing Sensor HP0) கிடைக்கிறது.

மேலும், ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் ஆட்டோ போகஸ் டிராக்கிங் கிடைக்கிறது. 85எம்எம் போகல் லென்த் கொண்ட கிம்பல்-லைக் ஸ்டெபிலைசேஷன் ஏபிஓ டெலிபோட்டோ கேமராவாக இது இருக்கிறது. 14எம்எம் போகல் லென்த் கொண்ட 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி, சோனி எல்ஒய்டிஐஏ 818 (Sony LYTIA 818) சென்சார் உள்ளது.

4K 120FPS லாக் வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. 60 FPS ஆட்டோ போகஸ் டிராக்கிங் ஸ்னாப்ஷாட் சப்போர்ட் உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Snapdragon 8 Elite Gen 5 3nm) சிப்செட் கொண்டுள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6600mAh பேட்டரி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும், 40W வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.

6.82 இன்ச் கியூஎல்டிபிளஸ் டிஸ்பிளே மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்க இருக்கிறது. விக்டரி கிரீன் (Victory Green), எக்லிப்ஸ் பிளாக் (Eclipse Black) கலர்களில் இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கிடைக்க உள்ளது. 5 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் மற்றும் 7 வருடங்களுக்கான செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கின்றன.

விவோ எக்ஸ்300 எப்இ அம்சங்கள் (Vivo X300 FE Specifications): 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6500mAh பேட்டரி கிடைக்கிறது. 40W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஓவர்ஹீட்டிங் புரொடெக்சன் கிடைக்கிறது. இந்த பெரிய பேட்டரி இருந்தும் 7.99எம்எம் தடிமன் மற்றும் 191 கிராம் எடை மட்டுமே கொடுத்துள்ளது.

50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் கிடைக்கிறது. டெலிபோட்டோவில் 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம், 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் மற்றும் சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது.

ஸ்ட்ரீட் போட்டோகிராபி மோட், ஜீஸ் மல்டிபோகல் போர்ட்ராய்டு உள்ளிட்ட பீச்சர்கள் கிடைக்கின்றன. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 (Snapdragon 8 Gen 5) கிடைக்கிறது. நோய்ர் பிளாக் (Noir Black), அர்பன் ஆலிவ் (Urban Olive) மற்றும் லைலாக் பர்பிள் (Lilac Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. 5 ஜெனரேஷன் ஓஎஸ், 7 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Ultra Vivo X300 FE With 5 Years OS Upgrades To Launch in India on May 6
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X