அவசரப்பட்டு புது போன் வாங்கிறாதீங்க.. 200MP கேமரா, 100W சார்ஜிங்.. 6600mAh பேட்டரி.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டையே வெயிட்டிங் மோடில் வைத்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன்கள் இன்று வெளியாக உள்ளன. இந்த வெளியீட்டுக்கு முன்பே முழு பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. இதையடுத்து விலை பட்டியல் கசிந்துவிட்டன. இந்த விவரங்களை பார்க்கலாம்.
இந்த எக்ஸ்300 சீரிஸ் மாடல்கள் மே 6ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட உடனேயே முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்துவிட்டன. ஏனென்றால், சீன மார்கெட்டில் ஏற்கனவே வெளியாகி இருந்தன. இதனாலேயே விவோ இந்தியா நிறுவனமும், அதிகாரப்பூர்வமாகவே முழு பீச்சர்களையும் உறுதி செய்துவிட்டது.

அமேசான், பிளிப்கார்ட் மற்றும் விவோ இந்தியா தளங்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிரீமியம் மாடல்களாக இருப்பதால், முன்கூட்டியே விலை விவரங்கள் கசிந்துவிட்டன. ஆகவே, விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.1,59,999ஆகவும், விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போனின் விலை ரூ.79,999ஆகவும் இருக்கலாம்.
இது பிரீமியம் மாடல்களுக்கு நிர்ணயிக்கப்படும் விலையாக இருக்கிறது. சொல்லப்போனால், ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களில் டாப் மாடல்களுக்கு நிகராக இருக்கிறது. அதற்கு காரணமாக டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்கள் உள்ளன. டிஎஸ்எல்ஆர் கேமராவுக்கு நிரகரான போகல் லென்த் கொடுக்க இந்த மாடல்களில் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்கள் வருகின்றன.
இதுபோக ஸ்மார்ட்போன்களிலேயே ஹார்ட்வேர் லெவல் போட்டோகிராபி அப்கிரேட்களை பார்க்க முடிகிறது. கேமரா பிரியர்களுக்கு ஏற்ப ஒட்டுமொத்த பேக்கேஜ் கொண்ட மாடல்களாக இவை இருக்கின்றன. இந்த கேமரா பீச்சர்களை முதலில் பார்த்துவிட்டு மற்ற பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம். டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர்கள் கூடுதல் விலைக்கு வரலாம்.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா முக்கிய அம்சங்கள்: 400 மிமீ ஆப்டிகல் போகல் லென்த் கொண்ட ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 அல்ட்ரா (ZEISS Telephoto Extender Gen 2 Ultra) மற்றும் 200 மிமீ போகல் லென்த் கொண்ட டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 கிடைக்கிறது. விவோ இமேஜிங் கிரிப் (vivo Imaging Grip), டிரைபாட் காலர் ரிங் (Tripod Collar Ring) உள்ளது.
மேலும், போர்டபிள் ஷோல்டர் ஸ்ட்ராப் (Portable Shoulder Strap) கிடைக்கிறது. இவை எக்ஸ்300 அல்ட்ரா போட்டோகிராபர் கிட் (X300 Ultra Photographer Kit) வழியாக கொடுக்கப்படுகிறது. இதற்கு ஏற்ப கேமரா அப்கிரேட் செய்யப்பட்டு உள்ளது. 200 எம்பி ஜீஸ் பிரைமரி கேமரா + 200 எம்பி ஜீஸ் டெலிபோட்டோ கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது.
50 எம்பி செல்பீ கேமரா உள்ளது. டால்பி விஷன் ரெக்கார்டிங் கிடைக்கிறது. 6.82 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 16 ஜிபி ரேம், 1 டிபி மெமரி உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உள்ளது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 6600mAh பேட்டரி கிடைக்கிறது. 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளது.
விவோ எக்ஸ்300 எப்இ முக்கிய அம்சங்கள்: 200 மிமீ விவோ ஜீஸ் டெலிபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 கிடைக்கிறது. 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்921 சென்சார் பிரைமரி கேமரா + 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்882 சென்சார் டெலிபோட்டோ + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா உள்ளது. 50 எம்பி செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் உள்ளது.
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 ப்ராசஸர் கிடைக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 40W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. மேலும், அர்பன் ஆலீவ் (Urban Olive), நோய்ர் பிளாக் (Noir Black) மற்றும் லைலாக் பர்பிள் (Lilac Purple) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் அதிகாரப்பூர்வமாக உறுதியானவை.


Click it and Unblock the Notifications