OFFER விலையில் அட்டகாச SALE.. 200MP ZEISS கேமரா, 6600mAh பேட்டரி, 100W சார்ஜிங்.. புது VIVO போன்.. எந்த மாடல்?
விவோ (Vivo) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆக (இம்மாத தொடக்கத்தில்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ (Vivo X300 FE) ஆகிய இரண்டுமே இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா, விவோ எக்ஸ்300 எப்இ விலை விவரங்கள்: இந்தியாவில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஆப்ஷன் ரூ.1,59,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்லிப்ஸ் பிளாக் மற்றும் விக்டரி கிரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனிற்கான விவோ ஸெய்ஸ் டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 அல்ட்ரா 400மிமீ ஈக்வலென்ட் (Vivo Zeiss Telephoto Extender Gen 2 Ultra) விலை ரூ.27,999 ஆகவும், விவோ இமேஜிங் கிரிப் கிட் (Vivo Imaging Grip Kit) விலை ரூ.11,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் விவோ எஸ்300 எப்இ ஸ்மார்ட்போனின் விலை, பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு வாங்க கிடைக்கிறது 12ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் உடனே வரும் டாப்-ஆஃப்-லைன் மாடலின் விலை ரூ.89,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா, விவோ எக்ஸ்300 மீதான சலுகைகள்: அறிமுக சலுகைகளின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் விவோ எக்ஸ்300 அல்ட்ரா, டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் ஜென் 2 அல்ட்ரா மற்றும் இமேஜிங் கிரிப் கிட் ஆகியவற்றை ரூ.1,99,997 க்கு பதிலாக, ரூ.1,95,997 என்கிற ஒருங்கிணைந்த தொகுப்பாக பெறலாம்.
விவோ நிறுவனம் எக்ஸ்300 அல்ட்ரா போட்டோகிராஃபர் கிட்-ஐயும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மேலே குறிப்பிடப்பட்ட ஆக்சஸெரீஸ்களுடன், கூடுதலாக 200மிமீ-க்கு இணையான டெலிஃபோட்டோ எக்ஸ்டெண்டர் லென்ஸும் அடங்கும். இதன் விலை ரூ.2,09,999 ஆகும். இது தவிர, விவோ நிறுவனம் இந்த தொகுப்பிற்கு ரூ.4,000 தள்ளுபடியும் வழங்குகிறது.
எஸ்பிஐ, கோடக், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், டிபிஎஸ், ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் மற்றும் ஆக்சிஸ் வங்கி, அத்துடன் யுபி பரிவர்த்தனைகள் மூலம் விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன்களை வாங்கினால் 10 சதவீத உடனடி கேஷ்பேக்கும் கிடைக்கிறது. கூடுதல் பலன்களில், ரூ.1,599-க்கு 60 சதவீதம் வரை உறுதியான பைபேக், ஒரு வருட இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி, மற்றும் ரூ.2,499-ல் தொடங்கும் வி-ஷீல்டு ஸ்கிரீன் டேமேஜ் பாதுகாப்பு திட்டத்தில் 60 சதவீதம் வரையிலான தள்ளுபடி ஆகியவைகள் அடங்கும்.
விவோ நிறுவனம், கூகுள் ஜெமினி ப்ரோ பலன்களுடன், 18 மாதங்களுக்கு 5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் அணுகல் உள்ளிட்ட ஜியோ பலன்களையும் சேர்த்து வழங்குகிறது. விவோ எக்ஸ்300 அல்ட்ரா மற்றும் விவோ எக்ஸ்300 எப்இ ஸ்மார்ட்போன்கள் அமேசான், குரோமா, ஃபிளிப்கார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், விஜய் சேல்ஸ் மற்றும் பிற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும், நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர்கள் மூலமாகவும் வாங்க கிடைக்கின்றன.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 144ஹெட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.82-இன்ச் 2கே AMOLED டிஸ்பிளே
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- அட்ரினோ 840 GPU மற்றும் விவோவின் VS1+ இமேஜிங் சிப்
- 16ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ்
- ஸெய்ஸ் நிறுவனத்தால் மேம்படுத்தப்பட்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) வசதியுடன் கூடிய 200 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 3.7x ஆப்டிகல் ஜூம் மற்றும் 105x வரையிலான டிஜிட்டல் ஜூம் வசதி கொண்ட 200 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார்
- 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6600mAh பேட்டரி
- முறையே 100W மற்றும் 40W வயர்டு மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு.


Click it and Unblock the Notifications