முரட்டு காம்பினேஷன்.. 7000mAh பேட்டரி.. SONY லைட்டியா கேமரா.. வாங்குனா இந்த VIVO போனை வாங்கணும்!
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் 6000mAh, 7000mAh போன்ற அதிக கெப்பாசிட்டி கொண்ட பேட்டரி இடம்பெறுவது சகஜமாகி வருகிறது. இப்போதைக்கு "இந்த பட்டியலில்" ஒப்போ நிறுவனம் டாப்பில் இருக்கிறது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சில நாட்களுக்கு பேட்டரி லைஃப்பை வழங்கும் 7500mAh பேட்டரி கொண்ட ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ (Oppo Find X9 Pro) ஸ்மார்ட்போன் சமீபத்தில் தான் அறிமுகமானது!
ஆனால் ஒப்போ நிறுவனத்தால் "இந்த கிரீடத்தை" நீண்ட நாட்கள் தக்கவைத்து கொள்ள முடியாது என்பது போல் தெரிகிறது. விரைவில் விவோ நிறுவனம் போட்டிக்கு ஒரு பிளாக்ஷிப் + பிக் பேட்டரி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. அது விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போன் ஆகும்.

இந்த தகவல் நம்பகமான லீக்கர் ஆன ஸ்மார்ட் பிகாச்சுவிடம் இருந்து வருகிறது. இது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறுகிறார். மற்றொரு நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனும் (Digital Chat Station) கூட இது மார்ச் 2026 இல் அறிமுகமாகும் என்று கூறி இருந்தது
விவோ ஏற்கனவே தனது திறனை சீராக அதிகரித்து வருகிறது. விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 6000mAh சிலிக்கான்-கார்பன் செல் பேக் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் விவோ எக்ஸ்300 சீரீஸ் வந்தது. அதில் ஸ்டாண்டர்ட் மாடல் 6040mAh பேட்டரியையும், ப்ரோ மாடல் 6510mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. ஆக விவோ எக்ஸ்300 அல்ட்ரா மாடலில் தோராயமாக 7000mAh அல்லது அதற்கும் மேலான பேட்டரி இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- குவால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் (Qualcomm Snapdragon 8 Elite Gen 5 chip)
- சோனியின் சமீபத்திய லைட்டியா 901 சென்சார் (Sony Lytia 901 sensor) உடன் இணைக்கப்பட்ட 35 மிமீ ப்ரைமரி லென்ஸ்-ஐ (35 mm primary lens) உள்ளடக்கிய புதிய கேமரா செட்டப்
சீனாவில் மட்டுமே கிடைக்கும் விவோ எக்ஸ்200 அல்ட்ரா ஸ்மார்ட்போனை போலல்லாமல், இந்த மாடல் முதல் நாளிலிருந்தே உலகளாவிய வெளியீட்டிற்கு செல்லும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையாக இருந்தால், விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக இருக்கும். இன்று இந்தியாவில் அறிமுகமான விவோ எக்ஸ்300சீரீஸ் உடன் இணையும்.
விவோ எக்ஸ்300 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.81,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்விரு வெறியன்ட்களுக்கும் டெலிகன்வெர்ட்டர் கிட் (Teleconverter Kit ) ஆனது தனியாக வாங்க கிடைக்கும். இதன் விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துமே (பேங்க் ஆபர்களுடன் - போன்கள்) டிசம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.


Click it and Unblock the Notifications








