மார்க்கெட் அதிர போறது உறுதி.. 200எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. புது Vivo 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
விவோ நிறுவனம் தனது புதிய விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) ஸ்மார்ட்போனை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இந்நிலையில் விவோ எக்ஸ்300 அல்ட்ரா போனின் முக்கிய விவரக்குறிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (Vivo X300 Ultra specifications): 6.82-இன்ச் பிளாட் எல்ஒடிபி டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2K ரெசல்யூஷன் (2K resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் சிறந்த திரை அனுபவத்தை தரும்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப் (Snapdragon 8 Elite Gen 5) வசதியுடன் இந்த புதிய விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு உடன் இந்த புதிய விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
200எம்பி மெயின் கேமரா+ 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த விவோ போனில் உள்ளன. எனவே இந்த புதிய விவோ போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா போனில் உள்ளன. மேலும் IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் இந்த புதிய விவோ போன் வெளிவரும்.
அதேபோல் 7000mAh பேட்டரி உடன் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை 100W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மூலம் விரைவில் சார்ஜ் செய்ய முடியும் என்பதையும் விவோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








