Home
Mobile

இது VIVO வேட்டை.. வேற எந்த போனும் வாங்கிடாதீங்க.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP குவாட் கேமரா!

விவோ (Vivo) நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களில் (Flagship Smartphone) ஒன்றான விவோ எக்ஸ்300 அல்ட்ரா (Vivo X300 Ultra) மாடலின் இந்திய அறிமுகம் (India Launch) மற்றும் முக்கிய அம்சங்கள் (Major Specifications) குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்? எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் டெபயன் ராய் (@Gadgetsdata) பகிர்ந்துள்ள விவரங்களின்படி விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது விவோ எக்ஸ்300 மேக்ஸ் (Vivo X300 Max) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து அறிமுகம் செய்யப்படலாம்.

இது VIVO வேட்டை.. 7000mAh பேட்டரி, 100W சார்ஜிங், 200MP குவாட் கேமரா!

இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் இந்தியாவிலும், பிற உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்ட டிப்ஸ்டர் கூறுகிறார். மார்ச் 3 ஆம் தேதி முடியும்படி திட்டமிடப்பட்டுள்ள சீனாவில் நடக்கும் வசந்த விழாவிற்கு பிறகு, விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் சீன அறிமுகம் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக மார்ச் 2026 இல் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை நாம் எதிர்பார்க்கலாம்!

விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்கள் இடம்பெறலாம்? இது 7000mAh பேட்டரியை கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த போன் 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்றும் கூறப்படுகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.82-இன்ச் 2K பிளாட் LTPO OLED டிஸ்பிளேவை பேக் செய்யலாம்

இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP69 மதிப்பீட்டைக் கொண்டிருக்கலாம், அதே நேரத்தில் USB 3.2 டைப்-சி போர்ட்டையும் கொண்டிருக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை இது 200-மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டரை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா யூனிட்டை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

அதில் ஆப்டிகல் ஜூம், 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா மற்றும் "கலர்களை துல்லியமாக கைப்பற்ற" 5-மெகாபிக்சல் கேமரா ஆகிய சென்சர்களும் இடம்பெறலாம். செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கு இது 50-மெகாபிக்சல் முன்பக்க கேமராவையும் கொண்டிருக்கலாம். இவைகள் எல்லாமே முன்னர் லீக் ஆன விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் அம்சங்களுடன் ஒற்றுப்போகிறது./

முன்னதாக சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா

- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்

- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்

முன்னதாக சீனாவில் அறிமுகமான விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி

- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Ultra India Launch Timeline Key Specifications Including Quad Camera 7000mAh Battery Tipped
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X