Home
Mobile

இந்தியாவுக்கு வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. 200MP கேமரா.. எந்த மாடல்?

விவோ எக்ஸ்300 அல்ட்ரா (vivo X300 Ultra) ஸ்மார்ட்போன் ஆனது சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் வரும் மே மாதம் 7-ம் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தகவல்கள் கசிந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது இந்த விவோ ஸ்மார்ட்போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

விவோ எக்ஸ்300 அல்ட்ரா அம்சங்கள் (vivo X300 Ultra specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) கொண்டுள்ளது விவோ எக்ஸ்300 அல்ட்ராஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த ஸ்மார்ட்போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

இந்தியாவுக்கு வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

6.82-இன்ச் 2கே எல்டிபிஒ AMOLED டிஸ்பிளே விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் உள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), எச்டிஆர் 10 பிளஸ், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங், ஆர்மர் கிளாஸ் புரொடெக்சன் (Armor Glass protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக போட்டோகிராஃபர் கிட் உடன் இந்த புதிய போன் இந்தியாவில் வெளியாகும். இந்த போன் தனித்துவமான கேமரா அனுபவத்தைத் தரும். அதுவும் விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200எம்பி Sony LYTIA 901 மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ர வைடு கேமரா + 200எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. இந்த போனின் ரியர் கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. VS1+ இமேஜிங் சிப் ஆதரவும் இந்த போனில் உள்ளது. OriginOS 6 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் இந்த விவோ 300எஸ் அல்ட்ரா ஸ்மார்ட்போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ எக்ஸ்300 அல்ட்ரா ஸ்மார்ட்போன். அதேபோல் IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவு இந்த விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போனில் உள்ளது. இன்-டிஸ்பிளே அல்ட்ராசோனிக் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (in-display ultrasonic fingerprint sensor) வசதியும் இந்த போனில் உள்ளது.

7000mAh பேட்டரி கொண்டுள்ளது விவோ எக்ஸ்300எஸ் ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் உள்ளன.

அதேபோல் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), ஹை-பை ஆடியோ (Hi-Fi Audio) போன்ற பல வசதிகள் இந்த விவோ போனில் உள்ளன. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7, புளூடூத் வி5.4, ஜிபிஎஸ், ஏ-ஜிபஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. மேலும் இந்த போன் இந்தியாவில் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photos credits: 91mobiles, vivo

More from GizBot

Best Mobiles in India

English summary
Vivo X300 Ultra India launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X