நொட்டிட்டு போயிருச்சு தம்பி.. அறிமுகமான 6 மாதத்தில் டாட்டா காட்டிய VIVO 5ஜி போன்.. எந்த மாடல்?
சரியாக 6 மாதங்களுக்கு முன்னர், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் டிசம்பர் 2 ஆம் தேடி அன்று இந்தியாவில் அறிமுகமான ஒரு விவோ ஸ்மார்ட்போன், இந்திய சந்தையிலிருந்து மெதுவாக மறைந்து வருவதாக தெரிகிறது. சில டிப்ஸ்டர்கள் இந்த போன் இந்தியாவில் நிறுத்தப்பட்டுவிட்டதாக கூறுகின்றனர். அது விவோ எக்ஸ்300 (Vivo X300) மாடல் ஆகும். இது எக்ஸ்300 ப்ரோ மாடலுடன் சேர்த்து இந்தியாவில் அறிமுகமானது.
ஆனால் விவோ இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும் பல ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்கள் ஆனது - இந்த போன் குறைந்த அளவிலோ அல்லது கிடைக்காமலோ இருப்பதாக காட்டுகிறது. சுவாரஸ்யமாக, இந்த மாத தொடக்கத்தில் தான் விவோ எக்ஸ்X300 எப்இ (VIVO X 300 FE) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இதுவே எக்ஸ்300 மாடலின் "இந்த நிலைக்கு" காரணமாக இருக்கலாம்.

விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போன் விலை விவரங்கள்: வாங்க கிடைக்கும் இடங்களில் / தளங்களில் விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கும், 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.81,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) ஸெய்ஸ் பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி
- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமரா
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications