DSLR கேமராவுக்கு குட்பை.. 100x ஜூமிங் 200MP ZIESS கேமராவுடன் புதிய VIVO போன் அறிமுகம்.. டிச.10 முதல் விற்பனை!
விவோ (Vivo) நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களாக விவோ எக்ஸ்300 சீரீஸ் (Vivo X300 Series) மாடல்கள் இன்று (டிசம்பர் 2 ஆம் தேதி) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சீரிஸின் கீழ் விவோ எக்ஸ்300 ( Vivo X300) மற்றும் விவோ எக்ஸ்300 ப்ரோ (Vivo X300 Pro) என்கிற 2 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின் ஓஎஸ் 6
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1260 × 2800 பிக்சல்ஸ் உடனான 6.78 இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பி
- ஆக்டாகோர் 3என்எம் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 சிப்
- 16GB வரை LPDDR5X அல்ட்ரா ரேம்
- 512GB வரை UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (எப்/1.57) ப்ரைமரி கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) அல்ட்ராவைடு கேமரா
- 100x டிஜிட்டல் ஜூம் திறன் கொண்ட 200-மெகாபிக்சல் (எப்/2.67) ஸெய்ஸ் பெரிஸ்கோப் கேமரா
- ரியர் கேமரா செட்டப்பில் 8கே வீடியோ ரெக்கார்டிங் திறன்
- 50 மெகாபிக்சல் (எப்/2.0) செல்பீ கேமரா
- 3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- லேசர் ஆட்டோஃபோகஸ் சென்சார்
- ஹால் எஃபெக்ட் சென்சார்
- ஐஆர் பிளாஸ்டர்
- ஃப்ளிக்கர் சென்சார்
- மல்டிஸ்பெக்ட்ரல் சென்சார்
- வைஃபை 7, ப்ளூடூத் 5.4, என்எஃப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி 3.2 ஜென் 1 டைப்-சி போர்ட்
- 90W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- 5440 எம்ஏஎச் பேட்டரி
- டூயல் ஸ்பீக்கர் சிஸ்டம்
- எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்
- ஆக்ஷன் பட்டன் மற்றும் சிக்னல் ஆம்ப்ளிஃபையர் சிப்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக IP68 ரேட்டிங்
- அளவீட்டில் 161.98×75.48×7.99மிமீ
- எடையில் சுமார் 226 கிராம்
விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- ப்ரோ மாடலில் உள்ள அதே ஓஎஸ், சிப், செல்பீ கேமரா, கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் மற்றும் செக்யூரிட்டி அம்சங்களை கொண்டுள்ளது
- சிறிய 6.31-இன்ச் பிளாட் Q10+ LTPO AMOLED டிஸ்பிளே
- ப்ரோ மாடலில் உள்ள 5,440mAh பேட்டரிக்கு பதிலாக 5,360mAh பேட்டரி
- ட்ரிபிள் ரியர் கேமரா தான் ஆனால் இது OIS உடன் 200-மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா + 50-மெகாபிக்சல் பெரிஸ்கோப் கேமராவை கொண்டுள்ளது
- அளவில் சிறியதாக இருப்பதால் இந்த போன் அளவீட்டில் 150.57×71.92×7.95மிமீ மற்றும் எடையில் சுமார் 190 கிராம் உள்ளது.
விவோ எக்ஸ்300 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: விவோ எக்ஸ்300 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.75,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.81,999 க்கும் மற்றும் ஹை-எண்ட் 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.85,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள விவோ எக்ஸ்300 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இவ்விரு வெறியன்ட்களுக்கும் டெலிகன்வெர்ட்டர் கிட் (Teleconverter Kit ) ஆனது தனியாக வாங்க கிடைக்கும். இதன் விலை ரூ.18,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்துமே (பேங்க் ஆபர்களுடன் - போன்கள்) டிசம்பர் 10 ஆம் தேதி விற்பனைக்கு வரும். முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கி விட்டன.


Click it and Unblock the Notifications








